ஆகஸ்ட் மாதம் சம்பளம் பெறும் போது 7வது சம்பள கமிஷன் அறிவித்த சம்பளத்துடன் மொத்த நிலுவை தொகையும் ஒரே தவணையில் அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய அரசு 2016-2017 நிதி ஆண்டிற்குள், ஜனவரி 1, 2016 ஆம் தேதி முதல் புதிய சம்பள உயர்வுக்கான நிலுவை தொகை கணக்கிடப்பட்டு அளிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. தற்போது அதில் மத்திய அரசு புதிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் முதல்
நிதி அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் முதல் 7வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. புதிய கட்டமைப்பின் மூலம் 2015, டிசம்பர் 31 ஆம் தேதி வரை இருந்த சம்பளத்தில் இருந்து 2.57 மடங்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
2016, ஜனவரி 1 ஆம் தேதி முதல்
2016, ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்பட்டு ஒரு கோடிக்கு மேலான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய காரர்களுக்கும் இந்த புதிய சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
நிலுவைத் தொகை
2016-2017 நிதி ஆண்டிற்குள் நிலுவைத் தொகை அளிக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டு வந்தது. தற்போது மொத்த நிலுவை தொகையும் ஒரே தவணையில் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வருமான வரி
இந்த நிலுவை தொகை அளிக்கப்படும் போது வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நுழைவு நிலை ஊதியம்
இப்போது ரூ.7,000 ஆக இருந்த நுழைவு நிலை ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.2.5 லட்சமாக நிர்னைக்கப்பட்டுள்ளது.
இனி இரண்டு சம்பள உயர்வு நாட்கள்
இதுவரை ஜூலை 1 ஆம் தேதி மட்டும் இருந்த சம்பள உயர்வு நாள் இனி இரண்டு முறையாக ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications