இன்றைய வேகமான வாழ்க்கை முறையை எளிமையாக்கப் பல வழிகளில் இருக்கும் போது, நாம் தினமும் படிக்கும் செய்திகளையும் எளிமையாகவும், அதுவும் 30 நொடிகளுக்குள் நீங்கள் படித்து முடிக்கும் வகையில் செய்திகளை நச்சென்று தமிழ் குட்ரிட்டன்ஸ் வழங்குகிறது.
இதனால் நீங்கள் குறுகிய காலத்தில் அதிகளவிலான செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும்.
சேவைத் துறை
சேவைத்துறையின் உற்பத்தி அளவு 3 மாத உயர்வை எட்டியுள்ளது. ஜூலை மாத முடிவில் இந்திய சேவைத்துறையின் உற்பத்தி 51.9 புள்ளிகளை அடைந்துள்ளது.
ESI அளவு குறைப்பு
இந்தியாவில் 393 மாநிலங்களில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் ESI அளவுகளை 6.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளது.
புதிய KWID
ரெனால்ட் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் தனது சிறிய ரகக் கார் பிரிவில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட புதிய KWID காரை அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளது.
செஸ் வரி
பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்படும் 20 சதவீத செஸ் வரியை 10-12 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி நிதியமைச்சகத்திடம் மனு அளித்துள்ளார்.
8% பொருளாதார வளர்ச்சி
அடுத்த 3 வருடத்தில் இந்தியாவில் சாதகமான நாணய கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் இந்தியா 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என S&P குளோபல் ரேடிங் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டீல் இறக்குமதி
2016-14ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவிற்கு அதிக ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளில் சீனாவை பின்னுக்குத் தள்ளி தென் கொரியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சப்ரதா ராய்
சஹாரா குழுமத்தின் தலைவர் சப்ரதா ராய்-இன் பரோலை செப்டம்பர் 16ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. பரோல் நீட்டிப்பு பெற சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் 300 கோடி ரூபாய் வைப்பு வைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி
ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் நாணய மறுஆய்வு கொள்கையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. இதனால் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் அதிகளவிலான மாற்றம் இருக்காது. அதேபோல் சம்பள கமிஷன் அமலாக்கத்தின் காரணமாக எஸ்பிஐ வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தைக் குறைத்த திட்டமிட்டுள்ளது.
132.04 பில்லியன் டாலர்
ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே தலைமையிலான அரசு 132.04 பில்லியன் டாலர் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் சரிவு பாதையில் இருக்கும் ஜப்பான் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்குச் செல்லத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்பீல்ட்
2016ஆம் நிதியாண்டில் ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்தியாவில் 600 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் ராயல் என்பீல்ட் பிரிவின் புல்லட் இருசக்கர வாகன விற்பனை புதிய உச்சத்தை அடைந்துள்ளதால், எய்சர் நிறுவனம் வரலாறு காணாத லாபத்தை அடைந்துள்ளது.
ஆகஸ்ட் 5
வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ஆம் தேதி கடைசி.
இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. வருமான வரியை கட்ட வேண்டாம்..!
பெர்ஜர் பெயின்ட்ஸ்
அடுத்த 4-5 வருடத்தில் வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பெர்ஜர் பெயின்ட்ஸ் நிறுவனம் தனது மூலதனத்தை 400 கோடி ரூபாய் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
புதிய சேவை
மும்பை பங்குச்சந்தை மியூச்சுவல் பண்ட் வர்த்தகத் தளத்தில் Systematic Transfer Plan and Systematic Withdrawal Plan என்ற இரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பிராமல் எண்டர்பிரைசர்ஸ்
நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிராமல் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் தனியார் நிறுவனங்களின் வாயிலாக NCD மூலம் 215 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இலவச வருமான வரி தாக்கல்
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன் -தமிழ் குட்ரிட்டன்ஸ்


Click it and Unblock the Notifications