டெல்லி: பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவன விளம்பரங்கள் மீது ஏப்ரல் 2015 முதல் ஜூலை 2016 வரை 30-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மொத்தமாக வந்துள்ள 33 புகார்களில் பல நுகர்வோர் புகார்கள் கவுன்சில் படி விளம்பர உள்ளடக்க சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் படி 21 விளம்பரங்களில் 17 புகார்கள் வந்தால் விளம்பர தர கவுன்சில் விதிமுறைகள் மீறல் என்றும் கூறினார். இதேப் போன்று 6 பேக்கேஜிங் தயாரிப்பு தொடர்பு நிறுவனங்கள் மீதும் புகார்கள் வந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் 2017ஆம் ஆண்டுக்குள் தனது வர்த்தகத்தை இரட்டிப்பாக வேண்டும் என இலக்குடன் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி மசோதாவை அமலாக்கம் செய்ய உள்ள இத்தகைய தருணத்தில் தனது வர்த்தகத்தை முழுமையாகச் சீர்ப்படுத்திக்கொள்ளவும், விநியோக சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த முதலீடு மிகப்பெரிய அளவில் உதவும். கடந்த மூன்று மாதத்தில் இந்தியாவில் 20 நகரங்களில் தனது வர்த்தக விரிவாக்கம் மற்றும் விநியோகத்திற்கும் ஏற்ற வகையில், சுமார் 12 லட்சம் சதுரடி அளவிலான சரக்கு கிடங்குகளை உருவாக்கியுள்ளது பதஞ்சலி நிறுவனம். மார்ச் மாத முடிவில் பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தகம் 5,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதே இலக்கு. 2011-12ஆம் நிதியாண்டில் வெறும் 450 கோடி ரூபாய் வர்த்தகத்தை பெற்று வந்த பதஞ்சலி 2014-15ஆம் நிதியாண்டுகளில் 2000 கோடியாகவும், 2015-16ஆம் நிதியாண்டில் 5,000 கோடி வர்த்தகத்தை பெற்று, இந்திய சந்தையில் ஆஸ்தான வியாபாரிகாளாக இருந்து ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, பிரிட்டாணியா, டாபர், நெஸ்லே மற்றும் பி&ஜி ஆகிய நிறுவனங்களுக்கு தண்ணி காட்டியது பதஞ்சலி. இலவசமாக வருமான வரி தாக்கல்
விளம்பர தர கவுன்சில் விதிமுறை மீறல்
6 பேக்கேஜிங் தயாரிப்பு நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள்
ஜிஎஸ்டி
12 லட்சம் சதுரடி கிடங்கு
ரூ.5,000 கோடி வர்த்தகம்
வளர்ச்சி
காவி உடை வியாபாரிகள்
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications