என்ன ஒரு வாழ்க்கை.. ஒரு நாளாவது இப்படி வாழ வேண்டும்..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் மும்பையில், அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆடம்பரமான அரண்மனை கோபுரம் ஆன்டிலியா-வில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வசித்து வருகிறார்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீதாவின் ஆசைக்கு இணைங்க அவர் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு. உலகத்தின் மிகவும் விலையுயர்ந்த தனிநபரின் வீடாக கருதப்படுகிறது. அப்போ எவ்வளவு காதல் என்பதை நீங்களே பாருங்கள். இந்த வீட்டின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சின்ன பிட்டு போட வேண்டும் என்றால் ஆன்டிலியா ரிக்டர் 8 அளவு கொண்டு நிலநடுக்கத்தை கூட தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் முகேஷ் அம்பானி எப்படியெல்லாம் வாழ்கிறார் தெரியுமா..?

எப்படி யோசனை வந்தது

எப்படி யோசனை வந்தது

ஒரு முறை, அம்பானியின் மனைவி நீதா, நியூயார்க்கில் மாண்டரின் ஓரியண்டலில் உள்ள ஒரு ஸ்பாவில் இருந்து சென்ட்ரல் பார்க்கை பார்த்துக் கொண்டிருந்தார். அங்குக் கண்ட சமகால உள் அலங்காரத்தால் கவரப்பட்ட அவர், அதைப் பற்றி டிசைனரிடம் விசாரித்தார்.

டிசைனருடன் ஆலோசனை

டிசைனருடன் ஆலோசனை

இப்படி ஒரு வீட்டைக் கட்டும் நோக்கில் மாண்டரின் ஓரியண்டலின் டிசைனர்களான பெர்கின்ஸ் & வில் மற்றும் ஹிர்ஷ் பெண்டர் அசோஸியேட்ஸ் அவர்களை அம்பானி குடும்பத்தார் கலந்து ஆலோசித்தனர்.

உயரமான ஒரு அற்புதம்

உயரமான ஒரு அற்புதம்

இதன் அற்புதம் என்னவென்றால் கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து செல்லும் கோபுரத்தை போல் மும்பை தொடுவானத்தில் காணப்படும்.

27 மாடி கோபுரம் 570 அடி

27 மாடி கோபுரம் 570 அடி

இந்த ஆன்டிலியா 50 மாடி கோபுரத்தை விட உயரமானது, இதில் 27 மாடிகள் உள்ளது. 570 அடி உயரத்தைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் சில தளங்கள் சராசரி உயரத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு உயரமாக இருக்கும்.

மிகப்பெரிய வாழும் இடம்

மிகப்பெரிய வாழும் இடம்

4,532 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது ஆன்டிலியா. இது தோராயமாக 49,000 சதுரடியாகும். இந்த வீட்டில் அம்பாணி குடும்பத்தார் 5 பேர் வசிக்கிறார்கள்.

600 பணியாளர்கள்

600 பணியாளர்கள்

அம்பானி குடும்பத்தாருடன் சேர்ந்து இந்தச் சொகுசு மாளிகையைத் தினசரி அடிப்படையில் பராமரிக்க 600 பணியாளர்கள் வசிக்கிறார்கள்.

தனித்துவம் வாய்ந்த ஒவ்வொன்றும்

தனித்துவம் வாய்ந்த ஒவ்வொன்றும்

ஒவ்வொரு தளத்திலும் பொதுவான அமைப்பைக் கொண்டுள்ள ஹோட்டல் அல்லது அபார்ட்மெண்ட்டை போல் அல்லாமல், ஆன்டிலியாவில் எந்தத் தளமும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டதில்லை, பொருட்களைப் பயன்படுத்தியதில்லை.

ஒன்பதாவது தளத்தில் உலோகம்

ஒன்பதாவது தளத்தில் உலோகம்

ஒன்பதாவது தளத்தில் உலோகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் பன்னிரண்டாவது தளத்தில் அதனைப் பயன்படுத்தக்கூடாது. செய்ததையே செய்யாமல், நிலைத்தன்மையுடனான பல்வேறு பாணிகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட கட்டிடக்கலையின் உருவகமாக இந்தக் கட்டுமானம் இருக்க வேண்டும் என்பதையே இதன் பின்னணி.

ஆடம்பரத்தின் மடியில்

ஆடம்பரத்தின் மடியில்

அனைத்து வகையிலும் ஆடம்பரத்தை அள்ளித்தெளிக்கும் ஆன்டிலியா. பல்வேறு தளங்களுக்கு சேவையளிக்க ஒன்பது லிஃப்ட்கள் உள்ளது. குடும்பத்தார், விருந்தாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனி லிஃப்ட்கள் உள்ளது.

உடற்பயிற்சியுடன் கலந்துள்ள சொகுசு

உடற்பயிற்சியுடன் கலந்துள்ள சொகுசு

அம்பானி வீட்டில் ஸ்பாவுடன் கூடிய கிரிஸ்டல் சரவிளக்குகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய பாரூம் உள்ளது.

இந்த அறையில் உட்புற/வெளிப்புற மதுபானம் அருந்தகம், ஓய்விடங்கள், கழிப்பறைகள் மற்றும் ஒப்பனை அறைகள் போன்றவை உள்ளது.

உட்புறத்தில் பனி உலகம்

உட்புறத்தில் பனி உலகம்

இந்தக் கட்டிடத்தில் தனி பனி உலகம் ஒன்றுள்ளது. இதனை ஐஸ் ரூம் என அழைக்கிறார்கள். குடும்பத்தாரும் விருந்தினர்களும் மும்பை வெயிலில் வதைபடும் போது இந்த அறையைப் பயன்படுத்துவார்கள்.

கார்களுக்கும் கூட சொகுசு

கார்களுக்கும் கூட சொகுசு

ஆன்டிலியாவில் அம்பானி குடும்பத்தாரின் கார்களை நிறுத்த மட்டும் ஆறு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 7-ஆவது தளத்தில் தனியார் கார் சேவை மையம் உள்ளது.

தொங்கும் தோட்டங்கள்

தொங்கும் தோட்டங்கள்

நன்றாகக் கட்டப்பட்ட இந்த மாளிகை டபிள்யு வடிவிலான தொங்கும் தோட்டங்களைக் கொண்டுள்ளது. இது கட்டிடத்தின் முகப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

குளுமையாக இருக்கும்

குளுமையாக இருக்கும்

அலங்கார நோக்கத்தைத் தவிர, இவை சூரிய ஒளியை உறிஞ்சுவதால், கட்டிடத்தின் உட்புறத்தைக் குளுமையாக வைத்து, ஆற்றல் பாதுகாப்பு சாதனமாகத் திகழ்கிறது.

வீட்டிற்கே ஹெலிகாப்டர்

வீட்டிற்கே ஹெலிகாப்டர்

ஆன்டிலியாவில் மூன்று ஹெலிபேட் உள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களுக்காக கட்டுப்பாடு மையத்தைக் கொண்டுள்ள ஏர் ஸ்பேஸ் தளமும் உள்ளது.

பணியாளர்கள் படை

பணியாளர்கள் படை

உலகத்தின் மிகவும் விலையுயர்ந்த இந்த வீட்டைப் பராமரிக்க 600 பணியாளர்கள் உள்ளனர். இவர்களை வீட்டின் உரிமையாளர் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார். இவர்கள் ஓய்வெடுக்கக் கட்டிடத்தில் தனியாக ஒரு அறை உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facts You Didn’t Know About Antilia an World's Richest Ambani Home

An extravagant palatial tower on Altamount Road in south Mumbai, Reliance Industries chairman Mukesh Ambani’s Antilia is the world’s most expensive private home.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X