டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை விட அதிக லாபத்தில் 'எச்சிஎல்'..!

டெல்லி: நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான எச்சிஎல் நிறுவனம், ஜூலை 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் மொத்த லாபத்தில் 14.8 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.

ஐடி துறையின் டாப் 3 இடங்களில் இருக்கும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் லாபத்தில் சரிவை சந்தித்த இதே காலகட்டத்தில் எச்சிஎல் நிறுவனம் மட்டும் லாபத்தில் அதிகளவிலான உயர்வைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

எச்சிஎல்

எச்சிஎல்

ஜூன் 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் எச்சிஎல் நிறுவனம் தனது சக போட்டி நிறுவனத்தை விடவும் அதிகமாக.. ஏன் லாபத்தில் உயர்ந்த ஒரே நிறுவனம் எச்சிஎல் என்று சொல்லும் அளவிற்குச் சந்தையில் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

லாபம்

லாபம்

நொய்டா-வை தலைமையாகக் கொண்டு வர்த்தகம் செய்து வரும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2016-17ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 14.8 சதவீத லாப உயர்வில் 2,047 கோடி ரூபாய் பெற்றுள்ளது. மார்ச் மாத காலாண்டில் இதன் அளவு 1,783 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

வருவாய்

மார்ச் மாத காலாண்டில் 9,777 கோடி ரூபாயாக இருந்த எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் ஜூன் காலாண்டில் 15.9 சதவீத உயர்வுடன் 11,336 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இதன் வருவாய் அளவு 12-147 சதவீத அதிகரித்துக் காணப்படுகிறது.

 

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் அளவுகள் 10 சதவீதம் உயர்ந்து 1.69 பில்லியன் டாலராகவும், லாப அளவு 9.5 சதவீதம் உயர்ந்து 305.2 மில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.

அனந்த் குப்தா

அனந்த் குப்தா

2017ஆம் நிதியாண்டு எச்சிஎல் நிறுவனத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என நம்புகிறோம், காலாண்டு வாரியாக 6 சதவீத வளர்ச்சியை அடைவோம் என எச்சிஎல் டெக் நிறுவனத்தின் சீஇஓ அனந்த் குப்தா காலாண்டு முடிவு வெளியிட்டு நிகழ்ச்சியின் போது கூறினார்.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 6 ரூபாய் அளித்துள்ளது எச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

ஜூலை 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் நிறுவனத்தில் புதிதாக 1,211பேர் இணைந்துள்ளனர். இதனால் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,06,107 ஆக உயர்ந்துள்ளது.

ஊழியர்கள் வெளியேற்றம்

ஊழியர்கள் வெளியேற்றம்

கடந்த 12 மாத்தில் இந்நிறுவனத்தின் ஊழியர்களின் வெளியேற்ற விகிதம் 17.8 சதவீதமாக உள்ளது.

13 டீல்கள்

13 டீல்கள்

ஜூன் காலாண்டில் எச்சிஎல் டெக் நிறுவனம் சுமார் 13 மிகப்பெரிய டீல்களில் கையெழுத்திட்டுள்ளது.

சந்தை நிலவரம்

சந்தை நிலவரம்

கடந்த சில ஆண்டுகளாக எச்சிஎல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் சந்தித்த அதிகளவிலான பிரச்சனைகளின் மூலம் சந்தையின் தனது நன்மதிப்பை அதிகளவில் இழந்து நிற்கிறது.

ஆனால் நிறுவனத்தில் இருக்கும் இடர்களைக் களைந்து தற்போது லாபத்தில் திளைத்துள்ளது எச்சிஎல். ஆனால் சந்தையில் பிறநிறுவனங்களில் நிலை வேறு..

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

என்.சந்திரசேகரன் தலைமை வகிக்கும் டிசிஎஸ் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 6,318 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.36 சதவீதம் குறைவாக இருந்தாலும், இதன் அளவு சந்தை கணிப்புகளை விட அதிகமாகும்.

2015ஆம் 4வது காலாண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் உயர்ந்து 29,305 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாலர் வருவாய் அளவுகளில் இதன் அளவு 3.7 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் டாலர் வருவாய் மதிப்பு 4,362 மில்லியன் டாலராக உள்ளது.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில் விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் நிறுவனம் லாபத்தில் 4.5 சதவீதம் சரிந்து 3,436 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் இதன் வருவாய் 1.4 சதவீதம் குறைந்து 16,782 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 29,000 கோடி ரூபாய்.

கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் அளவுகள் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

விப்ரோ

விப்ரோ

அபித் அலி நீமுச்வாலா தலைமையிலான விப்ரோ நிறுவனம் ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் லாபத்தில் 6.7 சதவீத சரிவடைந்துள்ளது, இதனால் கடந்த வருடம் 2,207.4 கோடி ரூபாயாக இருந்த லாபம் தற்போது 2,059 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

2016ஆம் நிதியாண்டின் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருமானத்தின் அளவு 10.7 சதவீதம் அளவில் உயர்ந்து 13,697.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேபோல் டாலர் வருவாய் அளவுகளும் 2.6 சதவீதம் அதிகரித்து 1,931 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அடுத்தக் காலாண்டில் இதன் அளவு 1,950 மில்லியன் டாலர் வரை உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் விப்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

rn

வருமான வரி தாக்கல்

இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+