அண்ணாச்சி கடைகளின் ‘வெர்ஷன் 2.0’

இந்திய சில்லறை சந்தை, 2020-ல் 1,00,000 கோடி டாலர் வரை உயரும்

By Ashok CR
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருவதை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பது நாட்டின் சில்லறை வர்த்தகம் தான்.

பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் ஒரு முக்கிய ஆய்வறிக்கையின் படி, 2015-ல் 60,000 கோடி டலாராக இருந்த இந்திய சில்லறை சந்தை, 2020-ல் 1,00,000 கோடி டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பிராண்ட்கள்

சர்வதேச பிராண்ட்கள்

இந்திய சந்தைக்குள் சர்வதேச பிராண்ட்கள் அணிவகுத்து நுழைந்து, இப்பிரிவை மேன்மேலும் சீராக்கி வருவதே இந்த அசுர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அனைத்து பிரிவுகளின் ப்ராண்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உலக தரத்திற்கு இணையாகப் பல மால்கள் இந்தியாவில் உருவாகி வருகிறது.

ஒரே இடம் முழுமையான சேவை

ஒரே இடம் முழுமையான சேவை

ஒரு கடைக்கு போக வேண்டுமென்றாலோ, திரைப்படத்திற்கு செல்ல வேண்டுமென்றாலோ, உங்கள் குழந்தைகளை விளையாட்டு பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றாலோ அல்லது குடும்பமாக இரவு விருந்து உண்ண உணவகத்திற்குச் செல்ல வேண்டுமென்றாலோ, அனைத்தையும் மால்களில் ஒரே இடத்தில் முடித்து விடலாம்.

மதிப்பான அமைவிடம், கலவையிலான அடையாளங்கள் மற்றும் முதலாளிகளின் முனைப்புடனான ஈடுபாடு ஆகிய அனைத்தும் சேர்ந்து மால்களையே ஒரு ப்ராண்ட் ஆக நிலை நிறுத்துகின்றன.

இத்தகைய மால்களில் நம்முடைய சில்லறை மற்றும் சேவை என இரண்டையுமே நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

 

பிரபலமாக இருக்கும் ஐந்து ஷாப்பிங் மால்கள்

பிரபலமாக இருக்கும் ஐந்து ஷாப்பிங் மால்கள்

மக்களிடம் பிரபலமாக இருக்கும் இந்தியாவில் உள்ள அத்தகையை ஐந்து ஷாப்பிங் மால்களை பற்றித் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். ஒரு மால் அதன் அளவு, அங்குள்ள ப்ராண்ட்கள், சில்லறைக் கடைகளின் எண்ணிக்கை, கிடைக்கக்கூடிய சேவைகள் மற்றும் வசதிகள் போன்ற அடிப்படையில் தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளோம்.

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால், மும்பை

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால், மும்பை

மும்பையின் மத்தியில் அமைந்துள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, பெயருக்கு ஏற்றார் போல் ஒரு நகரம் தான். 600 சில்லறைக் கடைகள், 14 திரைப்பட அரங்குகள் மற்றும் 20 உணவகங்களுடன் கூடிய பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி 40 லட்ச சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சாரா மற்றும் பர்பேரி போன்ற முன்னணி உலகளாவிய ப்ராண்ட்கள் சில இங்குள்ளது. இதை விட வேறு என்ன வேண்டும்? இந்த மாலிற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றும் உள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

லூலூ இன்டர்நேஷனல் ஷாப்பிங் மால், கொச்சின்

லூலூ இன்டர்நேஷனல் ஷாப்பிங் மால், கொச்சின்

கொச்சின் நகரத்தின் மையத்தில் விளங்கும் லூலூ இன்டர்நேஷனல் ஷாப்பிங் மால் மார்ச் 2013-ல் திறக்கப்பட்டதாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியரால் (என்.ஆர்.ஐ) கட்டப்பட்ட லூலூ இன்டர்நேஷனல் மால் 39 லட்ச சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 365 சில்லரை கடைகள், 9 பி.வி.ஆர். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், ஒரே நேரத்தில் நான்காயிரம் பேர்கள் அமர்ந்து உண்ணக்கூடிய உணவரங்கம் மற்றும் அந்நிய செலாவணி கவுண்டர்களுடன் கூடிய வருடம் முழுவதும் செயல்படும் ஃபெடரல் வங்கியின் கிளை ஆகியவற்றை இந்த மால் கொண்டுள்ளது.

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னை

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னை

தமிழ் நாட்டில் மிகப்பெரிய மால்-ஆன சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி இந்தியா அளவில் நான்காம் பெரிய மால் ஆகும். 24 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மால், நகரத்தில் உள்ள முதன்மையான ஷாப்பிங் இடங்களில் ஒன்றாகும். பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் 300 சில்லறைக் கடைகள், 30 பெண்களின் அழகு சாதன ஹோட்டல் அறைகள், அந்நிய செலாவணி கவுண்டர்கள், மல்டி-லெவல் கார் பார்க்கிங் மற்றும் இன்னும் பல வசதிகள் உள்ளது.

டிஎல்எப் மால் ஆப் இந்தியா, நொய்டா

டிஎல்எப் மால் ஆப் இந்தியா, நொய்டா

நொய்டாவின் செக்டர் 18-ல் சாமீஈபத்தில் தொடங்கப்பட்டது இந்த டிஎல்எப் மால் ஆப் இந்தியா. டிஎல்எப் குழுமத்தால் கட்டப்பட்ட இந்த மால் 18 லட்ச சதுர அடி பரப்பளவில் ஆறு கஸ்டமைஸ்ட் ஷாப்பிங் தளங்களுடன் அமைந்துள்ளது. இந்திய பேஷன் பிராண்ட்கள், குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பகுதி, கேளிக்கை, சர்வதேச காபி கடைகள், உணவரங்கங்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் ஒரு பந்தயப்பாதை அறை போன்றவற்றை இது கொண்டுள்ளது.

மண்ட்ரி ஸ்குவேர் மால், பெங்களூரு

மண்ட்ரி ஸ்குவேர் மால், பெங்களூரு

பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள மண்ட்ரி ஸ்குவேர் மால் நாட்டில் அதிகமாகச் செல்லப்பட கூடிய மற்றும் மிகவும் புகழ் பெற்றதாக விளங்கும் ஷாப்பிங் மால்களில் ஒன்றாகும். 17 லட்ச சதுர அடி பரப்பளவை கொண்டுள்ள இந்த மாலில் 10,000-க்கும் அதிகமான பிராண்ட்களை கொண்ட 240 கடைகள் உள்ளது. மண்ட்ரி ஸ்குவேர் மாலிற்கு ஒவ்வொரு மாதமும் 16 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

..." data-gal-src="http:///img/600x100/2017/03/12-1489317898-112000rupeeitriad.jpg">
சேமிப்பு

சேமிப்பு

<strong>உங்க பணத்தை இப்படியும் சேமிக்கலாம்.. கலக்கலான ஐடியாக்கள்..!</strong>உங்க பணத்தை இப்படியும் சேமிக்கலாம்.. கலக்கலான ஐடியாக்கள்..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Top most 5 Shopping Malls Must-Visit

Malls are a one-stop destination for both retail and service needs. Whether you are planning to shop, watch a movie, get your kids to a play zone or even host a family dinner, you can do it all in one place 'malls'.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X