அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தை இன்று துவங்கிய உடன் என்னை ஏற்றுமதியாளர்கள் யாஹூ நிறுவனத்தினால் ஒரு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளார்கள்.
1990-களில் இருந்து தங்களது யாஹூ மெஸ்சேன்ஜர் சேவையை காச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
யாஹூ மெஸ்சேன்ஜர் இன்றே கடைசி
ஆசிய சந்தையில் இன்று வரை பயன்படுத்தக் கூடியதாக இருந்து யாஹூ மெஸ்சேன்ஜர் சேவையை நாளை முதல் பயன்படுத்த இயலாது. இன்று ஆகஸ்ட் 5-ஆம் தேதியோடு யாஹூ மெஸ்சேன்ஜர் சேவையை நிறுத்தப்போவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது.
மாற்று வழிகள்
பல மாற்று வழிகள் இருந்தாலும், பல ஆயில் நிறுவனங்கள் விரும்பி மிகவும் பயன்படுத்தி வந்த இந்தச் சேவையை நிறுத்துவதால் மிகவும் மனம் உடைத்துள்ளதாக கூறுகின்றனர்.
இதயம் கணக்கிறது
சிங்கப்பூரில் இருந்து 20 வருடங்களாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் நிறுவன தலைவர்கள் கூறும்போது "நான் யாஹூ மெஸ்சேன்ஜர்-இல் பல நண்பர்களைப் பெற்றுள்ளேன், அவர்களை நான் பார்த்தது கூட கிடையாது, ஆனால் நான் அவர்களிடம் கதை பேசுவது, ஜோக் அடித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் இதை இப்போது இழக்க வேண்டும் என நினைக்கும் போது இதயம் கணக்கிறது." என்று கூறினார்.
மீண்டும் தொலைப்பேசி
யாஹூ மெஸ்சென்ஜரின் இந்த முடிவினால் எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு தொடர்பு சந்தைக்கு மாறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் மீண்டும் தொலைப்பேசியை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் பலர் கூறுகின்றனர்.
கமாடிட்டி வர்த்தகம்
கமாடிட்டி வர்த்தகத்தில் பங்கேற்ற பலருக்கு யாஹூ ஒரு மிகப்பெரிய வரமாக இருந்தது ஆனால் இன்று மீண்டும் ஃபோனை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக துபாயில் இருந்து ஆயில் தரகரான மாட் ஸ்டான்லி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications