மும்பையில் 1,200 ஹாட்ஸ்பாட்.. ஸ்மார்ட் சிட்டியின் முதல் படி..!
மும்பை: நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான மும்பையை, ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டத்தில் முதல் படியாக 2017ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் 1,200 ஹாட்ஸ்பாட் அமைக்கப்பட உள்ளது என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தேவிந்திர ஃபண்டாவீஸ் கூறினார்.

சிசிடிவி திட்டத்திற்கு அடுத்தபடியாக இந்த ஹாட்ஸ்பாட் திட்டத்தைக் கொண்டு வருகிறது மகாராஷ்டிர மாநில அரசு.
1,200 ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும் திட்டத்தில் முதல் பகுதியாக 500 ஹாட்ஸ்பாட் நவம்பர் மாதத்திற்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இம்மாநிலத்தில் 1,01,701 மலிவுவிலை வீடுகளை அமைக்கும் திட்டத்தில் மத்திய அரசு 1,513 கோடி ரூபாயும், மாநில அரசு 967 கோடி ரூபாயும் நிர்ணயம் செய்ததுள்ளது.


Click it and Unblock the Notifications