இன்போசிஸ் நிறுவனத்தை துவக்கிய அந்த 7 பேர்.. இப்போ என்ன பண்றாங்க.?

இன்போசிஸ் நிறுவனம் 1981ஆம் ஆண்டு ஏழு இளம் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இன்று இந்தியாவில் டாப் 3 இடங்களில் தொடர்ச்சியாக நிமிர்ந்து நடைபோடுகிறது.

பெங்களூரூவைச் சேர்ந்த இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஏறக்குறைய 42 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்குச் சந்தை மதிப்பைக் கொண்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நிறுவனர்கள் என்று கூறப்பாடும் அந்த 7 பேர் யார்..? இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே இப்போது பார்க்கப்போகிறோம்.

இன்போசிஸ்

இன்போசிஸ்

கடந்த சில வருடங்களாக இன்போசிஸ் நிறுவனர்கள் தங்கள் பணத்தை புதிய வர்த்தக முயற்சிகளிலும் வெற்றிகரமான தொழில் முனைவோரிடமும் முதலீடு செய்து வருகின்றனர்.

இந்த வர்த்தக சூழலுக்கு புதிய சக்தியை அளிக்கும் வகையில் அதிக அளவில் புதிய வர்த்தக முயற்சிகளில் முதலீடுகளைச் செய்யும் இந்த ஏழு பேரை பற்றிப் பார்ப்போமா?

 

என் ஆர் நாராயணமூர்த்தி

என் ஆர் நாராயணமூர்த்தி

இன்போசிஸ் மற்றும் காடமரான் வெஞ்சர்ஸ் நிறுவனங்களின் நிறுவனரான இவர் இன்றைய தலைமுறை தொழில் முனைவோர் சுறுசுறுப்பாகவும் அதீத சக்தி மற்றும் குறிக்கோள்களுடனும் இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிரறார். எனவே அவர்களுக்குச் சிரமங்கள், தயக்கங்கள் இன்றி செயல்பட ஏற்கனவே நன்கு அனுபவமிக்கவர்களிடம் இருந்து அறிவுறையுடன் கூடிய சுதந்திரம் தேவை எனக் கருதுகிறார்.

என் ஆர் நாராயணமூர்த்தியின் முதலீடுகள்

என் ஆர் நாராயணமூர்த்தியின் முதலீடுகள்

பெட்ரா தொழில் முயற்சிகள்: ஏபி, ப்ளூம் அண்ட் வைல்ட், லுகப், கவர்பாக்ஸ் மற்றும் ஹெக்டர் பெவெரேஜஸ் ஆகிய நிறுவனங்களில் என் ஆர் நாராயணமூர்த்தி முதலீடுகள் செய்துள்ளார்.

நந்தன் நிலகேனி

நந்தன் நிலகேனி

இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனரும் இந்திய சிறப்பு அடையாள விவர வளர்ச்சி ஆணைய (ஆதார்) முன்னாள் தலைவரும் ஆன இவர் "என் நேரம் தான் எனக்குத் தடையாக இருக்கிறதே தவிர முதலீடு அல்ல" என்கிறார். மேலும் அவர் தன்னுடைய முதலீடுகள் இல்லாத பல புதிய தொழில் முயற்சிகளுக்கு அறிவுரைகளையும் திறன் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.

நிலகேணியிடம் முதலீடுகளைப் பெற்ற தொழில்கள்

நிலகேணியிடம் முதலீடுகளைப் பெற்ற தொழில்கள்

டீம் இண்டஸ், ஜஃகர்நாட், பார்ட்டிகோ (4TiGO.), சிஸ்டமான்டிக்ஸ் மற்றும் செடெமாக் ஆகியவை.

மோகன்தாஸ் பாய்

மோகன்தாஸ் பாய்

இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரியும் மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்விசஸ் அமைப்பின் தலைவருமான இவர் "நாங்கள் தொழில் நுட்பத்திலிருந்து வந்தோம், தொழில் நுட்பத்தில் பணிபுரிந்தோம், ஆகவே தொழில் நுட்பம் அறிந்து வைத்திருக்கிறோம்.

இன்போசிஸ் நிறுவனத்தில் எங்கள் காலம் முடிந்த பிறகு புதிய முயற்சிகள் நன்கு வளர்ச்சியடைந்து வருவதாலும் எதிர்காலம் ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற உள்ளதாலும் அதில் பணிகளை மேற்கொள்ளவேண்டியது இயற்கையான ஒன்று" என்கிறார்.

 

பாய் முதலீடு செய்துள்ள முயற்சிகள்

பாய் முதலீடு செய்துள்ள முயற்சிகள்

பைஜூஸ், மாட் ஸ்ட்ரீட் டென், யுவர்ஸ்டோரி, ஜூம்கார் மற்றும் ரெஸ்ஸி

வீ பாலகிருஷ்ணன்

வீ பாலகிருஷ்ணன்

இன்போசிஸ்-இன் முன்னாள் தலைமை நிதி அதிகாரியும் எக்ஸ்பினிட்டி வெஞ்சர்ஸ் நிறுவனத் தலைவரும் ஆன இவர் இந்தியாவும் அமெரிக்காவைப் போல் சிறிய தொடக்கத் தொழில்கள் நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் பயணிக்கின்றது எனக் கருதுகிறார்.

அவரின் சகாக்களை போலவே நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்தை நம்புகிறார் (பி2பி).

 

வீ பாலகிருஷ்ணனின் முதலீடுகள்

வீ பாலகிருஷ்ணனின் முதலீடுகள்

யுனிக்கென் சிஸ்டம்ஸ், கானிகார்ட், டாக்ஸுத்ரா, அவேக்ஷா டேகினாலஜிஸ் மற்றும் க்ளோமேட் சொல்யூஷன்ஸ் ஆகியவை

எஸ் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்

எஸ் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்

இன்போசிஸ் மற்றும் ஆக்சிலோர் வெஞ்சர்ஸ் நிறுவன இணை நிறுவனரான இவர் "நான் தேர்வு செய்ததில் ஒன்று மூளை கணக்கியல் ஆய்வு அதாவது மூளை தொடர்புடைய அடுத்தது தலைமுறை கணினிகள் குறித்தது. மற்றொன்று மூளையின் முதுமை மற்றும் நரம்பு மண்டலத் தளர்வு நோய்களான அல்ஜெய்மர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்கள் தொடர்பானது.

க்ரிஷ் முதலீடு செய்த தொடக்கத் தொழில்கள்

க்ரிஷ் முதலீடு செய்த தொடக்கத் தொழில்கள்

லென்ஸ்கார்ட், அவாக்மா, யூனிபோர், லுகப் மற்றும் மாஜிக்எக்ஸ்

எஸ் டி ஷிபுலால்

எஸ் டி ஷிபுலால்

இன்போசிஸ் மற்றும் ஆக்சிலோர் வெஞ்சர்ஸ் நிறுவன இணை நிறுவனரான இவர் நூற்றுக் கணக்கான ரியல் எஸ்டேட் முதலீடுகளை அமெரிக்காவில் தனது சொந்த அலுவலகம் மூலம் செய்துள்ளார்.

எஸ் டி ஷிபுலால் செய்துள்ள முதலீடுகள்

எஸ் டி ஷிபுலால் செய்துள்ள முதலீடுகள்

இவர் முதலீடுகள் மூலம் பேடூ, செல்லர்வர்க்ஸ், ஈஸிபிக்ஸ், மர்ஜென்ஸி மற்றும் இவெண்ட்ஸ் ஹை ஆகிய தொழில் முயற்சிகளில் இடம்பெற்றுள்ளன.

என் எஸ் ராகவன்

என் எஸ் ராகவன்

இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனரும் என்எஸ்ஆர்சிஇஎல் மற்றும் ஐஐஎம் மும்பை ஆகியவற்றின் ஆலோசனைக்குக் குழு உறுப்பினரும் ஆன இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் முதலீடுகளை முதன் முதலில் செய்தவர்.

என் எஸ் ராகவன் செய்துள்ள முதலீடுகள்

என் எஸ் ராகவன் செய்துள்ள முதலீடுகள்

இவர் செய்த முதலீடுகள் அமாகி மீடியா லேப்ஸ், வீசூரி மற்றும் கோகியுப்ஸ் ஆகிய நிறுவனங்களில் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+