ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வைச் சமாளிக்க ஆகஸ்ட் 16 முதல் தங்களின் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் ரூ.3.25 லட்சத்தில் இருந்து ரூ.31.75 லட்சம் மதிப்பு வரையிலான கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது.
தற்போது தனது நிறுவன கார்களின் விலையை உயர்த்த இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் குறைந்தபட்சம் ரூ.3,000-இல் இருந்து ரூ.20,000 வரை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த விலை ஏற்றத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பின் சரிவின் காரணம்க்க விலை உயர்ந்துள்ள மூலப்பொருட்கள் விலையினால் உற்பத்தி செய்யும் விலை அதிகர்த்துள்ளதாகவும், எனவே அதனை கட்டுப்படுத்த இந்த விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவன மூத்த தலைவர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
அன்மையில் இந்தியாவின் அதிகப்படியான கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் குறிப்பிட்ட சில கார்களின் விலையை மட்டும் ரூ.1,500 இல் இருந்து ரூ.5,000 வரை விலை உயர்த்தியுள்ளனர்.
மாருதி நிறுவனம் குறைந்த பட்சம் ரூ.2.45 லட்சத்தில் இருந்து ரூ.12.03 லட்சம் வரையிலான கார்களை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications