தென்னிந்தியா தான் அடுத்த டார்கெட்.. ரோல்ஸ் ராய்ஸ் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பிரிட்டன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இனி தென் இந்திய மாநிலங்களில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் கடந்த 5 வருடங்களில் தனது புதிய தயாரிப்புகள் அனைத்தும் தென்னிந்திய மாநிலங்களில் அதிகளவிலான விற்பனையைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் ஆடம்பர சந்தைக்கும் மிகவும் குறைவான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது எனக் கருத்து நிலவினாலும் ஆன்லைன் மற்றும் ஈகாமர்ஸ் சந்தை வருகைக்குப் பின் முற்றிலும் மாறுபட்ட நிலை இந்தியாவில் நிலவுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

தென்னிந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை மற்றும் புதிய தொழிலதிபர்கள் உருவாகியுள்ள இத்தகைய சூழ்நிலையில், சந்தையில் இருக்கும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.

தென் இந்தியா

தென் இந்தியா

இதன் எதிரொலியாகவே ரோல்ஸ் ராய்ஸ் தனது கவனத்தைத் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படத் திட்டமிட்டுள்ளது.

கன்வெர்டிபிள் டாவ்ன்

கன்வெர்டிபிள் டாவ்ன்

இத்திட்டத்தின் முதல் பகுதியாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கன்வெர்டிபிள் டாவ்ன் காரை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.6.25 கோடி
 

ரூ.6.25 கோடி

4 இருக்கைகள் கொண்ட இந்தக் கன்வெர்டிபிள் டாவ்ன் காரின் விலை 6.25 கோடி ரூபாய். இந்தக் கார் 6 வண்ணங்களில் வருகிறது.

சிவென் ஜே.ரிட்டர்

சிவென் ஜே.ரிட்டர்

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு நெடுங்காலம் வர்த்தகத் தொடர்புகள் உண்டு. இந்நிலையில் இந்தியாவில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் வயதை பார்க்கும் போது 54-46 வயதுடைய மக்கள் அதிகளவில் உள்ளதாகத் தென் ஆசிய ரோல்ஸ் ராய்ஸ் வர்த்தகத் தலைவர் சிவென் ஜே.ரிட்டர் கூறினார்.

இளம் வாடிக்கையாளர்

இளம் வாடிக்கையாளர்

அதேபோல் இந்நிறுவனத்தின் ஒரு டெல்லியில் 20வயதுடைய ஒரு இந்நிறுவனத்தின் முக்கிய இளம் வாடிக்கையாளர்களில் சமீபத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rolls Royce to focus on South India for growth

British carmaker Rolls Royce Motor Cars Ltd. has identified South India as a growth area for increasing the sales of its luxury cars, according to a top official.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X