ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு நொடியும் ரசித்தேன்.. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்..!

மும்பை: இந்திய நாட்டின் பணவீக்கத்தையும், ரூபாய் மதிப்பையும் மோசமான நிலையில் இருந்து மீட்டு, பாதுகாப்பான நிலையில் நிறுத்திய ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜனின் 3 வருடப் பணிக்காலம் வருகிற செப்டம்பர் 4 தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 25 நாட்கள் தான்.

இந்நிலையில் தனது கடைசி நாணய கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தை இன்று நடத்திய ரகுராம் ராஜன், எவ்விதமான சலனமும் இன்றி, எவ்விதமான பின்விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாரான மனநிலையில் தனது பணவீக்க கொள்கையை முன் நிறுத்தி வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்துவிட்டார்.

சம்பள கமிஷன்

சம்பள கமிஷன்

மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகக் கடன் வழங்க வங்கிகளும், நாட்டின் பொருளாதாரத்தை ஊகுக்கிவிக்கத் தயாராக இருந்த நிதியமைச்சகத்திற்கு ராஜனின் முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது.

காரணம், ரகுராம் ராஜனுக்கும் சரி, ரிசர்வ் வங்கிக்கும் சரி, சுதந்திரமான கடைசி நாணயக் கொள்கை கூட்டம் இது. இதனால் அனைத்துத் துறையினரும் கணிசமான வட்டி விகித குறைப்பை எதிர்பார்த்தனர்.

 

 அதிக வாய்ப்புகள்

அதிக வாய்ப்புகள்

இதற்கு ரகுராம் ராஜன் கூறும் முக்கியக் காரணம், ஏற்கனவே மத்திய வங்கி அதிகளவிலான வட்டியைக் குறைத்துள்ளது. ஆனால் வணிக வங்கிகள் தனது வட்டியைக் குறைக்காத காரணத்தால் நாட்டின் வளர்ச்சி தடைப்பற்று நிற்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் 6.50 சதவீத ரெப்போ விகிதத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது என்று தனது கருத்தை நேர்படக் கூறினார்.

 

 

சர்ச்சைகளும்.. எதிர்ப்புகளும்..

சர்ச்சைகளும்.. எதிர்ப்புகளும்..

இந்த 3 வருடப் பணிக்காலம் ரகுராம் ராஜனுக்கு மிகவும் சவாலாகவே இருந்தது குறிப்பாக அரசு தரப்பில் இருந்து அதிகளவிலான சர்ச்சையான கருத்துக்கள் இவர் மீது பாய்ந்தது.

இதுவரை எந்த ஒரு ரிசர்வ் வங்கி கவர்னரையும் மத்திய அரசு அதிகாரிகள் அவ்வளவு எதிர்ப்பு தெரிவித்ததில்லை. காரணம் ராஜனின் திடமான கொள்கை மற்றும் யாருக்கும் வளைந்துக்கொடுக்காத தன்மை தான்.

 

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

ஆயினும் பிரதமர் நரேந்திர மோடி ராஜனுக்கும் உறுதுணையாக இருந்த போதிலும், 2வது பணிக்கால நீட்டிப்புக்கு மோடி வலியுறுத்தியும் ராஜன் மறுத்துவிட்டார்.

 

 

அமெரிக்கா

அமெரிக்கா

இன்னும் 25 நாட்களில் ரகுராம் ராஜன் நீண்ட விடுப்பில் இருந்து அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியில் மீண்டும் இணைய உள்ளார்.

ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன்

ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன்

இந்த 3 வருட கவர்னர் பணி எப்படி இருந்தது? என நாணய கொள்கை கூட்டத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகேட்ட போது, அவர் இந்த 3 வருட பணிக் காலத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன் எனக் கூறினார்.

ராக்ஸ்டார்

ராக்ஸ்டார்

மத்திய அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினர் ராஜனைக் கடுமையாக விமர்சனம் செய்தாலும், சாமானியர்களுக்கு இவர் ஒரு ராக்ஸ்டார்-ஆக விளங்கினார்.

25 நாட்கள்

25 நாட்கள்

அடுத்த 25 நாட்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் தான் திட்டமிட்டுள்ளதாகவும், கடைசி நாள் வரை எனது பணியை நான் முழுமையாக நிறைவேற்றுவேன் எனக் கூறினார்.

புதிய அமைப்பு

புதிய அமைப்பு

ஆக்டோபர் மாதத்தின் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள நாணய கொள்கை அமைப்பு நடத்தும். இதில் அரசு தரப்பில் 3 பேரும், ஆர்பிஐ தரப்பில் 3 பேரும் கொண்ட அமைப்புக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமை வகிப்பார்.

புதிய கவர்னர்

புதிய கவர்னர்

இந்நிலையில் அடுத்த 2 வாரங்களில் புதிய கவர்னர் பெயரை மத்திய அரசு வெளியிடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+