2015-16 மற்றும் 2016-17 நிதி ஆண்டிற்கு கூடுதலாக வருமான வரி கட்டியிருக்கும்பட்சத்தில் திருப்பி அளிக்க வேண்டிய தொகையை வருமான வரித் துறை திருப்பி அளிக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள செண்ட்ரல் ப்ராசசிங் மையம் கூடுதலாக வருமான வரித் தாக்கல் செய்துள்ளோருக்கு திருப்பி அளிக்க வேண்டிய ரூ.14,332 கோடியில் ஏற்கனவே 54.35 கோடி இதுவரை திருப்பி அளித்துள்ளதாகவும், அதில் இந்த 2016-2017 நிதி ஆண்டுக்கான திருப்பி அளிக்கும் தொகையாக ரூ.20.81 லட்சம் வரை ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் திருப்பி அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
75 லட்சம் வரி செலுத்துனர்கள்
மேலும் இது குறித்து நிதி அமைச்சகம் தெரிவிக்கையில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 75 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரி செலுத்துனர்கள் இணையதள சரிபார்ப்பு முறையை பயன்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்ற வருடம் இதுவே 33 லட்சம் நபர்கள் இணையதள சரிபார்ப்பு முறையை பயன்படுத்தி வருமான வறிதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டை
ஆதார் அட்டைப் பயன்படுத்தி சென்ற வருடம் 10.41 லட்சம் வரி செலுத்துனர்கள் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தினர் என்றும் அதுவே 2015-16 நிதி ஆண்டில் 17.68 லட்சம் பயனர்கள் ஆதார் அட்டைப் பயன்படுத்தி வரி செலுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
டிஜிட்டல் கையெழுத்து
அதுமட்டும் இல்லாமல் 3.32 லட்சம் நபர்கள் டிஜிட்டல் கையெழுத்து மூலமாக வறிதாக்கல் செய்துள்ளனர். மின்னணு வாயிலாக 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வரிதாக்கல் செய்துள்ளதாகும் குறிப்பிட்டுள்ளனர்.
226.98 லட்சம் நபர்கள் வரிதாக்கல்
கடந்த நிதி ஆண்டில் 70.97 லட்சம் நபர்கள் வரி தாக்கல் செய்ததாகவும், இந்த வருடன் 226.98 லட்சம் நபர்கள் வரிதாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
வருவாய் துறை ஊக்குவிப்பு
வரிதாக்கல் சரிபார்ப்பை பெங்களூரில் உள்ள செண்ட்ரல் ப்ராசசிங் மையத்திற்கு அனுப்பாமல் மின்னணு முறையில் சரிபார்க்க அனைத்து வரி செலுத்துநர்களையும் வருவாய் துறை ஊக்குவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications