7வது ஊதிய உயர்வு: கொடுப்பனவு குறித்து அமைச்சரவை முடிவு செய்யும் - ஜேட்லி

7வது ஊதிய குழு பரிந்துரைத்த மத்திய அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறித்து மத்திய அமைச்சரவை இறுதி முடிவு செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

7வது ஊதிய உயர்வு: கொடுப்பனவு குறித்து அமைச்சரவை முடிவு செய்யும் - ஜேட்லி

நேற்று ராஜ்ய சபாவில் 7வது ஊதிய குழு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இது பற்றி கூறிய நிதி அமைச்சர் அகவிலைப்படித் தவிர பிற கொடுப்பனவு (Allowances) பற்றி அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக கூறினார்.

மேலும் இது பற்றி நிதியமைச்சர், உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் பாதுகாப்பு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை என நிதித்துறை செயலாளர் அடங்கிய குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

இந்தக் குழு நான்கு மாதங்களில் தயாரித்த அறிக்கையை ஜூலை 22 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது என்றும், இதுபற்றிய முதல் கட்டக் கூட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைப்பெற்றது என்றும் அதில் 51 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 37 பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதுமட்டும் இல்லாமல் ஊழியர் சங்ககளுடன் இணைந்து சில ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜேட்லி, எதுவாக இருந்தாலும் அந்த கமிட்டிகள் எடுக்கும் முடிவை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு அவர்களே இறுதியாக முடிவு செய்வர் என்றார்.

2016, ஜனவரி 1 முதல் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜேட்லி தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+