இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனம் தனது கார் விற்பனையை அதிகரிக்க சக போட்டி நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் மாருதி விலையை உயர்த்தி வரும் நிலையில் ஃபோர்டு நிறுவனம் அடிரடியாக தனது முக்கிய கார்களின் விலையை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைத்துள்ளது.
ஃபோர்டு ஆஸ்பியர் காரின் தற்போதைய விலை
தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட ஃபோர்டு ஆஸ்பியர் காரின் விலை ரூ.5.28 லட்சத்தில் இருந்து ரூ.7.89 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறது.
ஃபோர்டு ஆஸ்பியர் விலை குறைப்பு
காரின் எளிமையான அம்சங்களைப் பொருத்து ஃபோர்டு ஆஸ்பியர் கார் விலை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஃபிகோ காரின் தற்போதைய விலை
அதேபோல, தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் கொண்ட ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.4.54 லட்சத்தில் இருந்து ரூ.6.29 லட்சம் வரை விற்று வருகிறது.
1.5 லிட்டர் டீசல் இஞ்சின் கொண்ட ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.5.63 லட்சத்தில் இருந்து ரூ.7.18 லட்சம் வரை விற்று வருகிறது.
ஃபோர்டு ஃபிகோ விலை குறைப்பு
பெட்ரொல் கார் விலை ரூ.29,000 முதல் ரூ.30,000 வரை விலையை குறைத்துள்ளது. அதேபோல டீசல் கார் விலையை ரூ.50,000 வரை விலை குறைத்துள்ளது.
மாருதி சூசுகி
சென்ற மார்ச் மாதம் மாருதி சுசூகி நிறுவனம் எஸ்யூவி விடாரா, ப்ரீசா காரை அறிமுகப்படுத்தியபோது ஃபோர்ட் இந்தியா நிறுவன எக்கோஸ்போர்ட்-இன் விலையை 1.12 லட்சம் ரூபாய் வரை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
இதுமட்டும் இல்லாமல் மாருதி சுசூகி, ஹோண்டா நிறுவனங்கள் தங்களின் கார் விலைகளை ஏற்றியுள்ள நிலையில் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு இரண்டு நிறுவனங்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications