ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று தனது கடைசி நாணய கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பின்னர் ரூ.50 லட்சம் உங்கள் அளிக்க உள்ளோம் என்று வரும் மின்னஞ்சல் பற்றி மீண்டும் நினைவு கூர்ந்த அவர் இது போன்ற மோசடி மின்னஞ்சலை நான் அனுப்புவதில்லை என்று கூறினார்.
மின்னஞ்சல்
உங்களுக்கு ஏதேனும் ரூ.50 லட்சம் பணம் அளிக்கிறோம் அதற்காகப் பரிவர்த்தனை கட்டணமாக இந்தக் கணக்கிற்கு ரூ.20,000 செலுத்துங்கள் என்று மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அழித்து விடுங்கள் என்றார்.
சாதரான தனிநபர்
மேலும், எந்த ஒரு சாதரான தனிநபருக்கும் ரிசர்வ் வங்கி எந்த ஒரு சூழ்நிலையிலும் பணம் அளிக்காது என்றும் கூறினார்.
கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்
மின்னஞ்சலில் நீங்கள் ரூ.20,000 கண்டிப்பாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் அந்த பணத்தை பிடித்துக்கொண்டு ரூ.49.8 லட்சமாக உங்களுக்கு அளிக்கக் கூடாது என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
சிந்தித்து செயல்படுங்கள்
இது போன்ற மோசடி மின்னஞ்சல்களை பெறுபவர்கள் முடிவு எடுக்கும் முன் நன்கு சிந்தித்து செயல்படுங்கள் என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.
வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளக்கூடிய - KYC
சாதாரண குடிமக்கள் பயன்பெற இன்னொரு முயற்சியாக ஆர்பிஐ இணையதளத்தில் உள்ள எளிமைப்படுத்தப்பட்ட உங்கள் வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளக்கூடிய KYC எனப்படும் (know your customer)பதிப்பைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளுங்கள்.
வங்கி அமைப்பில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு KYC ஒரு மிகப்பெரிய வசதி. இது பற்றி சில உள்ளூர் கிளைகளுக்கு தெரியாமல் இருக்கலாம் என்றார்.
KYC முறை
KYC முறையினால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் அடையாளம், முகவரி போன்ற தகவல்களைப் பெறக்கூடிய ஒரு எளிய வழியாகும். இதைப் பயன்படுத்துவதால் வங்கி சேவைகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இந்த KYC முறை வங்கி கணக்கு திறக்கும் போது அளித்துள்ள விவரங்களைப் பொறுத்ததாகும்.
விவரத்தை சுட்டிக்காட்டுங்கள்
வங்கி கிளைகளில் இந்த விதிமுறைகள் பற்றி தெரியவில்லை என்றால் தயவு செய்து ஆர்பிஐ இணையதளத்தில் உள்ள இந்த விவரத்தை சுட்டிக்காட்டவும் என்று ரகுராம் ராஜன் கூறினார்.
அதிக சம்பளம்


Click it and Unblock the Notifications