நான் ஃபைலர்ஸ் மானிட்டரிங் சிஸ்டம் (NMS) மூலமாக 1.36 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்ய சபாவில் செவ்வாய்க்கிழமை கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்த மாநிலங்களுக்கான நிதி அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார் வரி செலுத்தக்கூடிய சாத்தியம் இருந்தும் 1.36 கோடி நபர்கள் வரி தாக்கல் செய்யவில்லை என்றும், இவர்களை நான் ஃபைலர்ஸ் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் பதில் அளித்தார்.
2015-16 நிதி வருடத்தில் மொத்தம் 5,24,38,971 பேர் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளார்.
வருமான வரித்துறை செயல்படுத்தி வரும் என்எம்எஸ் முறையைப் பயன்படுத்தி வீட்டின் விவரம், தனிநபர் விவரம், மூன்றாம் நபர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிவர்த்தனை போன்ற விவரங்களைப் பெற இயலும் என்றார்.
மேலும், ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர் 2016, ஃபிப்ரவரி 29 வரை கணக்கிடப்பட்டு வருவாய் துறையினர் மூலமாக தற்போது 2,59,260 நபர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் ஏதேனும் நிறுவனங்கள் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மூலம் மோசடி செய்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது என்று கூறினார் ஆனால் நிறுவனங்களின் பெயரை வெளியிடவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications