'ரிலையன்ஸ் ஜியோ' சூறாவளியில் இருந்து தப்பிக்க 'ஏர்டெல்' புதிய திட்டம்..!

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்-பெய்ட் பிராட்பேண்ட் அல்லது டிடிஎச் (DTH) வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி வரை கூடுதல் தரவை வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்துள்ளது.

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு நன்றி

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு நன்றி

பார்தி ஏர்டெல் தலைமை செயலாளர் ஹேமந்த குமார் குருசாமி இது பற்றி கூறுகையில் எங்களது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த புதிய வசதியை அளிக்கிறோண் என்று கூறினார்.

இதுமட்டும் இல்லாமல் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் (எஸ்டிடி) அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் தரவு போன்றவற்றை புதிய போஸ்ட்பெய்ட் திட்டமாக அறிவிக்க இருக்கிறது அன்றும் தெரிவித்தார்.

 

மை ஹோம் ரிவார்ட்ஸ்

மை ஹோம் ரிவார்ட்ஸ்

ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளகள் வீட்டில் யாரெல்லாம் கூடுதலாக ஒரு போஸ்ட்பெய்ட் மொபைல் சேவை அல்லது டிஹிட்டல் டிவி சேவை இலவச தரவை அளிக்கிறது.

எந்த அளவுக்கு அதி இணைப்புகள் பயன்படுத்திகிறார்களஒ அந்த அளவுக்கு அதிக இலவச தரவை எல்லா மாதமும் பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.

 

15 ஜிபி கூடுதல் தரவு

15 ஜிபி கூடுதல் தரவு

ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் வீட்டில் இரண்டு ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மொபைல் எண் மற்றும் ஒரு ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தால் கூடுதலாக 15 ஜிபி தரவை பெறலாம் என்று கூறியுள்ளது.

மை ஏர்டெல் ஆப்

மை ஏர்டெல் ஆப்

இந்த மை ஹோம் ரிவார்ட்ஸ் சலுகைகளைப் பெற மை ஏர்டெல் ஆப் செயலியை பயன்படுத்தி தங்களது இணைப்புகளைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏர்டெல் மொபைல் தரவு பேக் 67% விலை குறைப்பு

ஏர்டெல் மொபைல் தரவு பேக் 67% விலை குறைப்பு

அன்மையில் ஏர்டெல் நிறுவனம் ஜூலை மாதத்தில் 67% வரை தனது 3ஜி, 4ஜி தரவு பேக்குகள் விலை குறைத்தது. அதேபோல ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்களும் குறைத்தது.

மேலும் ஏர்டெல் நிறுவனம் வரம்பற்ற மொபைல் அழைப்பு பேக்காக ரூ.1,199 அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம் அதன் லைஃப் (LYF)மொபைல் ஃபோனை 25 சதவீதம் விலை குறைத்து 2,999 ரூபாய்க்கு அன்மையில் அறிவித்தது.

இந்த லைஃப் மொபைல் ஃபோன் இலவச ஜியோ சிம்களுடன், 90 நாட்கள் இலவச வரம்பற்ற 4ஜி தரவு மற்றும் குரல் அழைப்பு சேவைகளுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

 

மூன்று மாதம்

மூன்று மாதம்

டெலிகாம் துறை ஆய்வாளர்களின் கணிப்பின் படி முக்கேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 4ஜி மற்றும் அதி வேக இணையதள தரவு சேவைகளை இன்னும் மூன்று மாதங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1.5 மில்லியன் பயனர்கள்

1.5 மில்லியன் பயனர்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடியை இந்நிறுவனத்தின் இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்கிற்காக முதலீடு செய்துள்ளது. ரிலையஸ் ஜியோ நிறுவனத்தில் தற்போது 1.5 மில்லியன் பயனர்களாக அதன் ஊழியர்கள் மற்றும் பிற சோதனையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டாம் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம்

இரண்டாம் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம்

இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த கட்டணம், இலவச அலைப்புகள், இலவச தரவு என பல ஆஃபர்களை அளிக்கும் என தொழில் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

rn

ஜிஎஸ்டி மசோதா

ஜிஎஸ்டி மசோதாவால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்..? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+