சீனாவின் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சியோமி நிறுவனம் தங்கள் புதிய தயாரிப்புகளின் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் தனது நேரடி கடைகளை திறக்க இருக்கிறது.

தற்போது 5,000 ஸ்டோர்கள் உள்ள நிலையில் 2017-ம் ஆண்டிற்குள் 10,000 ஸ்டோர்களை திறக்க முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் சியோமி நிறுவனத்தின் மேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயின் கூறுகையில் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே ஸ்டோர்கள் உள்ளன. அதை மேலும் விரிவு படுத்தி இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டோர்களை திறக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிறுவனத்தின் 75 சதவீத ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இப்போது அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் ஸ்மார்ட் ஏர் சுத்திகரிப்பு உட்பட தங்களது நிறுவனத்தின் பிற தயாரிப்புகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.
ஆரம்பக்கட்ட நிலை
இந்தியாவில் துவக்க நிலையில் 35 நபர்களுடன் துவங்கப்பட்ட நாங்கள் இன்னும் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தற்போது உள்ள 100 நபர்கள் கொண்ட குழுவாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு லீ ஜூன் என்பவரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் 2014-ம் ஆண்டு தனது விற்பனையைத் துவக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications