லாபத்தில் 78 சதவீதம் சரிவு: ஐடிபிஐ வங்கி
மும்பை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யும் ஐடிபிஐ வங்கியின் லாபம் 78 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் 1,200 கோடி ரூபாய் வரியாகச் செலுத்தப்பட்டதால் இவ்வங்கியின் மொத்த லாபத்தின் அளவு 241 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதேபோல் இவ்வங்கியின் வட்டி வருமானம் 14.20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஜூன் 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் 1,494 கோடி ரூபாயாக இருந்த வட்டி வருமானம் 1,706 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனுடன் ஐடிபிஐ வங்கியின் வராக்கடன் அளவு 27,275 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஐடிபிஐ வங்கியின் பங்கு விலை 0.29 சதவீதம் உயர்ந்து 68.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. ஐடிபிஐ வங்கி பற்றி முழுமையான விபரங்களைத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications