ஓலா, யூபெர் நிறுவன டாக்ஸி கட்டணத்திற்குக் கடிவாளம் போட்ட உயர் நீதிமன்றம்..!

டெல்லி: பயணிகளிடம் இருந்து அரசு நிர்ணயித்துள்ள விலையையே வசூலிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஓலா, யூபெர் டாக்ஸி நிறுவனங்களுக்குக் கடிவாளம் போட்டுள்ளது.

ஓலா, யூபெர் போன்ற ஆப் மூலம் இயங்கி வரும் டாக்ஸி நிறுவனங்கள் நேரத்திற்கு ஏற்றார் போல பரபரப்பான மணிநேரத்தில் ஒரு விலையும் சாதரான நேரங்களில் ஒரு விலையும் என தங்களது விலையை ஏற்றி இறக்கி கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

10 நாட்களில் அரசு நிர்ணயித்த விலை

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு பொது நல வழக்கில் இன்னும் 10 நாட்களில் டெல்லி அரசு 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட கொள்கையை இந்த டாக்ஸி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி மன்மோகன் தீர்ப்பளித்துள்ளார்.

ஓலா, யூபெர் நிறுவன டாக்ஸி கட்டணத்திற்குக் கடிவாளம் போட்ட உயர் நீதிமன்றம்..!

டெல்லி போக்குவரத்து துறை

டெல்லி போக்குவரத்து துறையின் படி சாதரான டாக்ஸிகளுக்கு கிலோ மீட்டாருக்கு 12.5 ரூபாயும், ஏசி இல்லா டாக்ஸி கட்டணமாக 14 ரூபாயும், கருப்பு ஏசி மற்றும் மஞ்சள் டாக்ஸிகளில் கிலோ மீட்டருக்கு ரூ.16 வசுலிக்க வேண்டும். அதே போல இரவு நேரப் பயணங்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக வசூலித்துக் கொள்ளலாம்.

நடப்பு கட்டணம்

இப்போது குறைந்தபட்ச கட்டணமாகக் கிலோ மீட்டருக்கு ரூ.20 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அலை விலை

இதுபோன்ற விலை ஏற்ற இறக்கம் பற்றி நிறைய வழக்குகள் வருவதாகக் கூறிய நீதிமன்றம் ஓலா, யூபெர் போன்ற தனியார் பொது போக்குவரத்து நிறுவனங்களை விலையைச் சீர் படுத்துவதின் மூலம் அரசு போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் என்று கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+