ஆர்பிஎஸ் எதிரொலி: இன்போசிஸ் ஊழியர்களே பயப்பட வேண்டாம்.. உங்கள் வேலைக்கு பாதிப்பில்லை..!

பெங்களுரூ: எடின்பர்க் நகரத்தை தலைமையிடமாக கொண்டு உலக நாடுகளில் வங்கி மற்றும் நிதியியல் சேவை அளித்து வரும் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, இங்கிலாந்தில் தனது புதிய வங்கியைத் துவங்கு திட்டத்தை கைவிட்டுள்ளது.

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து வங்கிக்கு மிகப்பெரிய அளவில் மென்பொருள் மற்றும் இதர தொழில்நுட்ப சேவை வழங்குவதில் இன்போசிஸ் மிக முக்கியமானவை. இங்கிலாந்து திட்டத்தை ஆர்பிஎஸ் கைவிட்டுள்ளதால் இன்போசிஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய வாடிக்கையாளரை தற்போது இழந்து, மும்பை பங்குச்சந்தையில் 4 சதவீதம் அளவிலான சரிவை இன்று சந்தித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இத்திட்டத்தில் பணியாற்றி வந்த 3000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை இன்போசிஸ் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

3,000 ஊழியர்களை நீக்க வாய்ப்பு

3,000 ஊழியர்களை நீக்க வாய்ப்பு

ஆர்பிஎஸ் நிறுவனத்தில் திடீர் முடிவைத் தொடர்ந்து 3,000 ஊழியர்கள் வரை குறைக்க இருப்பதாக இன்ஃபோஸிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடப்பு நிதி ஆண்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் பங்குகள் விலை குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

300 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு

300 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு

ஜூலை 2014-இல் இருந்து இன்போசிஸ் பங்குகள் 10 சதவீதம் குறைந்து காணப்பட்டு வரும் நிலையில் ஆர்பிஎஸ்-இன் இந்த முடிவினால் 2017வது நிதி ஆண்டில் 50 முதல் 100 மில்லியன் டாலர்கள் வரை இழப்பும், 2018வது நிதி ஆண்டில் 100 முதல் 200 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

பிற சேவைகள்

பிற சேவைகள்

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நட்டத்தை ஆர்பிஸ் வங்கியுடனான பிற பிரிவுகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் பெற இன்போசிஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

11.5 சதவீதம் வரை சிக்கல்

11.5 சதவீதம் வரை சிக்கல்

2017-ம் வருடத்தின் முதல் காலாண்டு முடிவுக்குப் பிறகு இது நடந்துள்ளதால் 2017-வது நிதியாண்டின் வருவாயில் 10 முதல் 11.5 சதவீதம் வரை சிக்கலில் உள்ளது. இதுவே 2016 செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.5 முதல் 1 சதவீதம் வரை வளர்ச்சி தடைபெற்றது.

வருவாய் 0.4 சதவீதம் மட்டுமே

வருவாய் 0.4 சதவீதம் மட்டுமே

இன்போசிஸ் வருவாயில் 0.4 சதவீதமே ஆர்பிஎஸ் இடமிருந்து வருகிறது. இது ஒரு சாதாரண வணிக நிகழ்வே. மேலும் இதற்கு முன்பு எப்போதெல்லாம் அடிப்பட்டதோ அப்போதெல்லாம் பின்னர் மீண்டும் தனது வர்த்தகத்தை இன்ஃபோஸிஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 

இன்றைய வர்த்தக முடிவில் இன்ஃபோஸிஸ்

இன்றைய வர்த்தக முடிவில் இன்ஃபோஸிஸ்

இன்றைய வர்த்தக முடிவில் இன்போசிஸ் 1.16 சதவீதம் குறைந்து ஒரு பங்கின் விலை ரூ.1,063.30 ஆக உள்ளது.

முதலீடு

முதலீடு

எனினும், தமிழ் குட்ரிட்டன்ஸ் ஆய்வின் படி இன்போசிஸ் பங்குகளில் முதலீடு செய்ய இது சிறந்த தருணமாக பார்க்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+