இணையம் இல்லாமல் மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் சரிபார்க்க புதிய முறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மற்றும் யூனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளைத் தொடர்ந்து இன்னும் பல வங்கிகள் வருமான வரிதாக்கல் செய்ய இணையம் இல்லாமல் புதிய மின்னணு முறையில் சரிபார்க்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளனர்.

 

மின்னணு சரிபார்ப்பு குறியீடு (EVC)

மின்னணு சரிபார்ப்பு குறியீடு (EVC)

வருமான வரித்துறையின் இணையதளத்தில் உள்ள ஈ-ஃபில்லிங்கில் வங்கி கணக்கை உறுதிப்படுத்தும் முன் மின்னணு சரிபார்ப்பு குறியீடு உருவாக்குவதன் மூலமாகச் சரி பார்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்த முறையை நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் மற்றும் மத்திய செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் அறிமுகப்படுத்திய இத்திட்டம் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் திரும்ப மின்னணு முறையில் சரிபார்க்க எளிதாக்கும் என்கின்றனர்.

 

பிஎன்பி மற்றும் யூபிஐ வங்கி

பிஎன்பி மற்றும் யூபிஐ வங்கி

பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மற்றும் யூனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா என இரு வங்கிகளிலும் இந்த முறை தற்போதே துவங்கப்பட்டுள்ளது. பிற வங்கிகளும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் கூறியுள்ளது.

ஏடிஎம் வாயிலாக மின்னணு சரிபார்ப்பு குறியீடு
 

ஏடிஎம் வாயிலாக மின்னணு சரிபார்ப்பு குறியீடு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் கனாரா வங்கிகளின் ஏடிஎம் கிளைகளில் மின்னணு சரிபார்ப்பு குறியீட்டை உருவாக்கி கொள்ளலாம். பிற வங்கிகளும் விரைவில் இந்தச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

செண்ட்ரல் ப்ராசசிங் மையம்

செண்ட்ரல் ப்ராசசிங் மையம்

பெங்களூரில் உள்ள செண்ட்ரல் ப்ராசசிங் மையம் கூடுதலாக வருமான வரித் தாக்கல் செய்துள்ளோருக்கு திருப்பி அளிக்க வேண்டிய ரூ.14,332 கோடியில் ஏற்கனவே 54.35 கோடி இதுவரை திருப்பி அளித்துள்ளதாகவும், அதில் இந்த 2016-2017 நிதி ஆண்டுக்கான திருப்பி அளிக்கும் தொகையாக ரூ.20.81 லட்சம் வரை ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் திருப்பி அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

75 லட்சம் வரி செலுத்துனர்கள்

75 லட்சம் வரி செலுத்துனர்கள்

மேலும் இது குறித்து நிதி அமைச்சகம் தெரிவிக்கையில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 75 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரி செலுத்துனர்கள் இணையதள சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்ற வருடம் இதுவே 33 லட்சம் நபர்கள் இணையதள சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தி வருமான வறிதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

ஆதார் அட்டைப் பயன்படுத்தி சென்ற வருடம் 10.41 லட்சம் வரி செலுத்துனர்கள் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தினர் என்றும் அதுவே 2015-16 நிதி ஆண்டில் 17.68 லட்சம் பயனர்கள் ஆதார் அட்டைப் பயன்படுத்தி வரி செலுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

டிஜிட்டல் கையெழுத்து

டிஜிட்டல் கையெழுத்து

அதுமட்டும் இல்லாமல் 3.32 லட்சம் நபர்கள் டிஜிட்டல் கையெழுத்து மூலமாக வறிதாக்கல் செய்துள்ளனர். மின்னணு வாயிலாக 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வரிதாக்கல் செய்துள்ளதாகும் குறிப்பிட்டுள்ளனர்.

226.98 லட்சம் நபர்கள் வரிதாக்கல்

226.98 லட்சம் நபர்கள் வரிதாக்கல்

கடந்த நிதி ஆண்டில் 70.97 லட்சம் நபர்கள் வரி தாக்கல் செய்ததாகவும், இந்த வருடன் 226.98 லட்சம் நபர்கள் வரிதாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

வருவாய் துறை ஊக்குவிப்பு

வருவாய் துறை ஊக்குவிப்பு

வரிதாக்கல் சரிபார்ப்பை பெங்களூரில் உள்ள செண்ட்ரல் ப்ராசசிங் மையத்திற்கு அனுப்பாமல் மின்னணு முறையில் சரிபார்க்க அனைத்து வரி செலுத்துநர்களையும் வருவாய் துறை ஊக்குவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Without Net Banking E-Verifying ITR With PNB and UBI

Without Net Banking E-Verifying ITR With PNB and UBI other bankers also going to follow.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X