உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் விற்பனையாளரான ஹவாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது தொழிற்சாலையைத் துவங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை இன்னும் ஓர் இரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஹவாய் இந்தியா கன்ஸ்யூமர் வர்த்தக குழு தலைவர் பீட்டர் சை இது பற்றி கூறும்போது ஏற்கனவே உற்பத்திக்கான உரிமத்தைப் பெற்றுவிட்டதாகவும் விரைவில் உள்ளூர் உற்பத்தி ஆலை பற்றிய திட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும் நேற்று ஹவாய் பி9 மொபைல் போனின் வெளியீட்டின் போது அறிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் போன்களுக்கு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருக்கும் என இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்த வருடத்தின் இறுதிக்குள் சில ஆயிரங்களாக உள்ள ஹவாய் ஸ்டோர்களின் எண்ணிக்கையை 50,000 ஸ்டோர்களாக அதிகர்க்க உள்ளதாகவும் பீட்டர் அறிவித்துள்ளார்.
ஹவாய் நிறுவனம் இந்தியாவில் 16 வருடங்களாக மொபைல் வர்த்தகம் செய்து வந்த நிலையில், 1999 ஆம் ஆண்டே பெங்களூரூவில் தங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் ஹாவாய் மற்றும் ஹானர் என்ற இரு பிராண்ட் பெயர்கள் கொண்ட நிறுவனமாக ஸ்மார்ட் போன்களை விற்று வருகிறது. தனது முதல் ஹவாய் பிராண்ட் போனை இந்தியாவில் ஏறத்தாழ மூன்று வருடம் கழித்து அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹவாய் பி9 போனை அறிமுகப்படுத்திய பிறகு பேசிய பீட்டர் இதில் சிக்னல் தரத்தை மேம்படுத்த மற்றும் கால் ட்ராப்களை குறைக்க மூன்று ஆண்டெனாக்கல் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளான தி மேட்புக் மற்றும் தி டாக் பேண்ட் பி3 போன்ற டேப்லட்களையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இப்பொது ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் போர்டலில் ஹவாய் பி9 போனை ரூ.39,999-க்கு விற்பனை தொடங்கியது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications