புது டெல்லி: பணமில்லா பரிவத்தனையை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட், டெபிட், இணையதள வங்கி சேவைகளைப் பயன்படுத்தி அரசு துறைகளுக்கு பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு இனி பரிமாற்ற கட்டணங்கள் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR)
இப்போது வாடிக்கையாளர்கள் கிரெடிட், டெபிட், இணையதள வங்கி வாயிலாக அரசு துறைகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR)என அரசுக்குக் பன பரிமாற்ற கட்டணமாக செலுத்திவருகின்றனர்.
கட்டணங்கள்
2012-ம் வருடம் ரிசர்வ் வங்கி எம்டிஆர் கட்டணத்தை 2,000 ரூபாய்க்கு குறைவாக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 0.75 பரிவர்த்தனை கட்டணமாகவும் அதற்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணமாகவும் நிர்னைத்தது. எனினும், கிரெடிட் கார்டு பரிவத்தனைகளுக்கு ஆர்பிஐ எந்த முடிவையும் எடுக்கவில்லை.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணை
பிற விற்பனையாளர்களைப் போன்று அரசு நிர்வாகங்கள் வணிகர் தள்ளுபடி விகித கட்டணத்தை ஏற்க வேண்டும். டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் அல்லது பிற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தும் போது பொதுமக்கள் இந்தக் கட்டணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டாம் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்பிஐ முயற்சி
சென்ற மார்ச் மாதம் ஆர்பிஐ வங்கி குறைந்த அளவிலான பேப்பர் பணம் பயன்படுத்தும் சமுகம் மற்றும் கார்டுகளை ஏற்கக் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
கிரெடிட், டெபிட் கார்டு பயனர்கள்
2015 ஆக்டோபர் மாதம் வரையிலான கணக்கின்படி இந்தியாவில் 61.5 கோடி டெபிட் கார்டு பயனர்களும் 2.3 கோடி கிரெடிட் கார்டு பயனர்களும் இருந்தனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications