துபாயில் ஒரு வாரம் முன்பு மில்கா ஓரியோ சாக்லேட் பார்களை வர்த்தக கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து முழுமையாக திரும்ப பெறுமாறு மில்கா நிறுவனத்திற்கு துபாய் நகராட்சி உத்தரவிட்டது.
சமுக வலைத்தளங்கள்
சமுக வலைத்தளங்களில் ஓரியோ சாக்லேட் பார்களில் மது கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து துபாய் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை சோதனைக்கு உட்படுத்தியது.
சாம்பிள்கள் சரிபார்த்தல்
வாட்ஸ் ஆப் செவை மூலம் எங்களுக்கு வந்த இந்த செய்தியை தொடர்ந்து நாங்கள் இந்த தயாரிப்பை ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும் அதில் எடுத்துக்கொண்ட சாம்பிள்களை சரிபார்த்ததில் மது பொருட்கள் ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தவறாக மொழிபெயர்ப்பு
இந்தச் சிக்கலுக்கு முக்கிய காரணம் தயாரிப்பு லேபிள் மீது தவறாக செய்யப்பட்டு இருந்த மொழி பெயர்ப்பே காரணம் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட லேபிளில் சாக்லேட் லிக்வர் என்பதை சாக்லேட் மதுபானம் என்று குறிப்பிட்டு இருந்ததே வதந்திக்கான காரணம் என்றும் அது மதுபானம் அல்ல அரைக்கப்பட்ட கொக்கோ பேஸ்ட் என்ற விளக்கத்தையும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உத்தரவு
நாங்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்குத் திருத்தம் செய்ய மற்றும் தவறு எங்கு நடந்தது என்று கண்டறிய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குழப்பத்தை தடுக்க நடவடிக்கை
நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை தடுக்க இரண்டு நாட்களில் இந்த தயாரிப்பை எல்லாக் கடைகளில் இருந்தும் திரும்ப பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் துபாய் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹலால் மற்றும் பாதுகாப்பானது
இந்த தயாரிப்புகள் ஹலால்(இஸ்லாமிய சட்டப்படி உண்பதற்குரியது) மற்றும் பாதுகாப்பானது என்றும் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை தடுக்க மட்டுமே பொருட்களை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாநகராட்சி அறிக்கை
துபாய் மாநகராட்சி பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் சமுக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் வரும் இது போன்ற வதந்திகளைப் பார்த்து குழப்பம் அடையாமல் 0501077799 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்குக் கேள்விகளை அனுப்பிச் சரிபார்த்து கொள்க என்று அறிவுறுத்தியுள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications