இந்தியாவில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்பி, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் இணைந்து தனது நிறுவனத்தின் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நெட்வொர்க்கின் 4ஜி தரவு முன்னோட்ட ஆஃபரை அளிக்கிறது.
இந்த ஆஃபரின் மூலம் எச்பி வாடிக்கையாளர்கள் லைஃப் (LYF)-இன் ஜியோஃபை சாதனம் பயன்படுத்தி ஜியோ 4ஜி சேவையைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
பழைய வாடிக்கையாளர்கள்
எச்பி நிறுவனம் இது பற்றி கூறுகையில் தங்களது எல்லாப் பழைய வாடிக்கையாளர்களும் இந்த ஆஃப்ர் பெற ஒரு கூப்பன் குறியீட்டுடன் அழைப்பு கடிதம் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.
கூப்பன் பயன்படுத்தும் முறை
வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர், ரிலையன்ஸ் டிஜிட்டல் / டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஆகிய இடங்களில் இந்த கூப்பன் குறியீடு மற்றும் சென்று வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களான அடையாள அட்டை, புகைப்படம், முகவரி சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பித்து லைஃபின் ஜியோஃபை சாதனத்தைப் பெறலாம்.
புதிய எச்பி வாடிக்கையாளர்கள்
புதிதாக எச்பி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கூப்பன் குறியீடு வழங்கப்படும் இதை மேலே கூறியது போலவே சமர்ப்பித்து ஜியோஃபை சாதனத்தைப் பெறலாம்.
ரூ.2,899 ஜியோஃபை
இதன்படி எச்பி வாடிக்கையாளர்கள் ஜியோஃபை சாதனத்தை தாங்கள் அளிக்கும் கூப்பனைப் பயன்படுத்தி 2,899 ரூபாய் கொடுத்து வங்க வேண்டும் என்றும் இதன் மூலம் 90 நாட்களுக்கு வரம்பற்ற 4ஜி சேவையைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்லுடன் கூட்டணியில் மகிழ்ச்சி
எச்பி இன்க் நிறுவனத்தின் இயக்குநர் கேதன் படேல் இதுபற்றி கூறுகையில் எச்பி இன்க் உண்மையான டிஜிட்டல் அனுபவம் மற்றும் 4G அதிவேக இணையச் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் பொருட்டு ரிலையன்ஸ் ரீடெய்லுடன் கூட்டாக அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications