7வது சம்பள கமிஷன் திட்டம் செயல்படுத்துதல் பற்றி ஆய்வு செய்த இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ரூ.34,600 கோடியை ஜனவரி முதல் ஜூலை வரையிலான நிலுவைத் தொகைக்காக மட்டும் மத்திய அரசு செலவிட வேண்டி வரும் என்று கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் சம்பளம் பெறும் போது 7வது சம்பள கமிஷன் அறிவித்த சம்பளத்துடன் மொத்த நிலுவை தொகையும் ஒரே தவணையில் அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளதாக சென்ற மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.
1 கோடி அரசு ஊழியர்கள்
அரசு ஏற்கனவே 2.57 மடங்கு சம்பள உயர்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், 1 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 7 சம்பள கமிஷன் மூலம் பயனடைய உள்ளனர்.
இந்தச் சம்பள உயர்வு 2016 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் தனது லாபத்தில் இருந்து 65,876 கோடியை ஆர்பிஐ மத்திய அரசுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாட்டின் நிதி நிலையில் 7 சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பள உயர்வை வழங்குவதினால் எந்த ஒரு நிதிப்பற்றாக்குறையும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
அதிகபட்ச ஊதியம் யாருக்கு
அதிகபட்ச ஊதியமாக அமைச்சரவை செயலாளர்களுக்கு 90,000 ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாகச் சம்பள உயரும் என்று கூரப்படுகிறது.
நுழைவு நிலை ஊதியம்
இப்போது ரூ.7,000 ஆக இருந்த நுழைவு நிலை ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.2.5 லட்சமாக நிர்னைக்கப்பட்டுள்ளது.
இனி இரண்டு சம்பள உயர்வு நாட்கள்
இதுவரை ஜூலை 1 ஆம் தேதி மட்டும் இருந்த சம்பள உயர்வு நாள் இனி இரண்டு முறையாக ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்படும்.
மேலும் கொடுப்பனவு உயர்வு குறித்து மாற்றங்கள் பற்றி அமைப்பு பின்னர் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications