டெல்லி: 200 மில்லியன் டாலர் தொகை கொடுத்து வாங்கிய டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளது ஓலா டாக்ஸி நிறுவனம்.
டாக்ஸி ஃபார் ஷூர்
ஓலா ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனம் 18 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் டாலர் கொடுத்து டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை வாங்கியது.
இப்போது டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஓலா டாக்ஸி செயலியை பயன்படுத்தத் துவங்கிவிட்டதால் இந்நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளதாக ஓலா அறிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு ஐஐடி அகமதாபாத் கல்லூரியில் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் மற்றும் ரகுநாதன் ஆகிய இருவரால் துவக்கப்பட்டது டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனம்.
ஓலா செயலி
டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை வாங்கியதற்கான காரணமாக குறைவான கட்டணத்தில் அந்நிறுவனம் செயல்படுவதே என்றும் இப்போது ஓலா மைக்ரோ துவங்கப்பட்டுள்ளதால் அனைத்து டாக்ஸி ஃபார் நிறுவனம் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் ஓலா செயலிக்கு மாறிவிட்டனர் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஓலா மைக்ரோ
இந்த ஆண்டு துவக்கத்தில் குறைந்த விலையில் ஏசி கார் சேவையை ஓலா மைக்ரோ துவக்கியதுடன் தற்போது 90 நகரங்கள் வரை இந்தச் சேவையை விரிவுபடுத்த உள்ளது.
ஊழியர்கள்
எவ்வளவு ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவிக்காத ஓலா நிறுவனம், பெரும்பாலான டாக்ஸி ஃபார் ஷூர் ஊழியர்களை ஓலா வளர்ச்சிக்காக வேலையில் அமர்த்திக்கொள்ளும் என்றும் கூறியுள்ளனர்.
உபர் நிறுவனத்துடனான போட்டி
உபர் நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்க மற்றும் இந்தியாவில் தங்களது சேவையை அதிகரிக்க 2015 மார்ச் மாதம் டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை ஓலா நிறுவனம் வாங்கியது.
ஓலா, உபர் இருநிறுவனங்களுக்கு இடையிலும் இந்திய சந்தையில் பன்மடங்கு போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
சீன செயற்பாடுகளை விற்பனை செய்யும் உபர்
சீனாவில் இயங்கி வரும் தனது டிடி(DIDI) சக்சிங் செயற்பாடுகளை விற்பனை செய்வதாக அறிவித்துள்ள உபர் நிறுவனம் அதன் பிறகு இந்தியாவில் தங்களது சேவையை மேலும் அதிகரிக்கும் திட்டத்தில் உள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஓலா நிறுவனத்தில் டிடி சக்சிங் ஒரு சிறுபான்மை முதலீட்டு நிறுவனமாகும்.


Click it and Unblock the Notifications