கடந்த எட்டு ஆண்டுகளாக முகேஷ் அம்பானியின் சம்பளம் ரூ.15 கோடி என்று வாங்கும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?
சுனில் மிட்டலின் சம்பளம்
இப்போது இன்னும் ஐந்து வருடங்களுக்குத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள சுனில் மிட்டல் ஆண்டிற்குச் சம்பளமாக ரூ.21 கோடியும் ரூ.9 கோடி செயல்திறனுக்கு ஏற்ற ஊதியம் என ரூ.30 கோடி வரை பெறுகிறார்.
இந்தச் சம்பளம் மட்டும் இல்லாமல் இவருக்கு அளிக்கப்படுகின்ற சலுகைகள் இவருடைய வருடாந்திர வருமானத்தில் 50 சதவீதத்துக்கும் மிகாமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சம்பள உயர்வுக்கான ஒப்புதல்
இந்தச் சம்பள உயர்வுக்கான ஒப்புதல் 2016 ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த நிறுவனத்தின் 21-ம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நடப்பு நிதி ஆண்டில் இவருக்கு இந்தச் சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015-2016 நிதி ஆண்டு வாங்கிய சம்பளம்
நிறுவனத்தின் அறிக்கையின் படி 2015-2016 ஆம் நிதி ஆண்டில் சுனில் மிட்டலின் மொத்த சம்பளம் ரூ.27.8 கோடி என்றும் இதில் சம்பளம் ரூ.24.6 கோடியும், பிற சலுகைகளாக 1.17 கோடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிரிவின் நிர்வாக இயக்குநர்
இதேபோல நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டலுக்கும் சம்பள உயர்வு அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விட்டலுக்கு வருடாந்திர சம்பளமாக ரூ.7 கோடி வழங்கப்படும்.
இவருக்கும் மிட்டலைப் போன்று பிற இதர சலுகைகள் அனைத்தும் உள்ளது என்றும், இத சம்பள உயர்வு 2016, ஜூன் 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விட்டலின் 2015-2016 நிதி ஆண்டின் சலுகைகள் மற்றும் 5.9 கோடி ரூபாய் சம்பள என இரண்டும் சேர்த்து 10.3 கோடி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் சம்பளம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2015-2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை அன்மையில் வெளியிடப்பட்ட போது இதில் கடந்த எட்டு ஆண்டுகளாக முகேஷ் அம்பானியின் சம்பளம் ரூ.15 கோடி என்றும், சம்பள உயர்வு ஏதும் பெறவில்லை என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஏற்கனவே இருந்தாலும் அதை அனில் அம்பானி நிர்வகித்து வருகிறார். முதல் முறையாகத் தொலைத்தொடர்பு துறையில் அடி எடுத்து வைக்கும் முகேஷ் அம்பானி பல அதிரடி திட்டங்களைத் தீட்டி உள்ளார். இதன் மூலம் இவரின் சமபளம் மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏல சிக்கல்
ஏர்செல் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அன்மையில் வங்கி உள்ள நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் துவங்கப்படுவதால் ஸ்பெக்ட்ரம் ஏலத்திலும் மூன்று நிறுவனங்களின் பெயரில் தனித்தனியாக காற்றலைகளை ஏலத்தில் எடுப்பதுடன் மூன்று நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் தலைவலி
இதனால் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் ரிலையன்ஸ், ஏர்செல், ஜியோ என மூன்று நிறுவனங்களும் ஒன்றினைக்குப்படுமானால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுக்கும் என்பது ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக உள்ளது.


Click it and Unblock the Notifications