முடிவுக்கு வந்தது ஆங்கிலேயேர் வழக்கம்.. ஜனவரி மாதத்தில் மத்திய அரசு 'பட்ஜெட்' தாக்கல்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் பல இடங்களில் ஆங்கிலேயேர் விட்டுச்சென்ற பழக்கவழக்கங்களையே நாம் இன்று வரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இத்தகைய பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதிமாக, இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாகப் புதிய முயற்சி செய்துள்ளது.

மத்திய அரசு வழக்கமாகப் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும், அதன் பின்னர்ப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகளை மே மாத முதல் செலவிடத் துவங்கும் இதுவே இந்திய அரசு காலங்காலமாகப் பயன்பாட்டில் வைத்துள்ளது.

ஜனவரியில் பட்ஜெட் தாக்கல்

ஜனவரியில் பட்ஜெட் தாக்கல்

பிப்ரவரி மாத கடைசி நாள் பட்ஜெட் தாக்கல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. 2017ஆம் ஆண்டு முதல் ஜனவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் என்ன லாபம்..?

இதன் மூலம் என்ன லாபம்..?

ஜனவரி மாதம் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்ஜெட் அமலாக்கத்திற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக முடிவடைந்துவிட்டால் அரசு நிறுவனங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்தின் முதலே பயன்படுத்த துவங்கலாம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் முறையில், மே மாதத்தில் தான் அரசு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறுகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.

 

குடியரசு தினம்

குடியரசு தினம்

ஜனவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தீர்க்கமாக மத்திய அரசால் முடிவு செய்யுப்ப்பட்டாலும் எந்தத் தேதி என்பதும் இன்னும் விவாத தளத்திலேயே உள்ளது.

ஆனால் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின செயல்பாடுகளும் மனத்தில் வைத்துக்கொண்டு தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இறுதி தேதி முடிவு செய்யப்பட்டும் எனவும் அரசு தரப்பு கூறியுள்ளது.

 

மே மாதம்

மே மாதம்

ஒவ்வொரு நிதியாண்டின் மே மாதத்தின் 2வது வாரத்திற்குள் மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி நிதி சார்ந்த அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் பெற்றப்படும்.

புதிய நடைமுறையில் இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

 

நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

மத்திய அரசு புதிய பட்ஜெட் தாக்கல் முறையைத் தயார் செய்தாலும் அவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த ஒப்புதல் 2017ஆம் நிதியாண்டுக்குள் பெற வேண்டும்.

 

புதிய பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்

புதிய பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்

மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாகப் புதிய பொருளாதார வளர்ச்சி திட்டங்களை வடிவமைத்துள்ள நிலையில் இதன் வெற்றிக்குச் சந்தையில் சிறப்பான சூழ்நிலையை உருவாக்கவே மத்திய அரசு இத்தகைய புதிய மாற்றத்தை நாட்டில் புகுத்த திட்டமிட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு..

மாலை 5 மணிக்கு..

1999ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயேர் ஆட்சி பாணியில் நாடாளுமன்றத்தில் மாலை 5 மணிக்குப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடல் பிஹாரி வாஜ்பாய்

அடல் பிஹாரி வாஜ்பாய்

1999ஆம் ஆண்டு முதல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசே பட்ஜெட் தாக்கல் நேரத்தை மாலை 5 மணியில் இருந்து காலை 11 மணியாக மாற்றியது.

தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிப்ரவரி மாதத்தை ஜனவரியாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்குமா..?

 

புதிய அமைப்பு

புதிய அமைப்பு

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி அளவுகளைத் துறைவாரியாக மதிப்பீடு செய்யப் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் ஆய்வு முடிவுகள் 2016ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் எனவும் அறியப்படுகிறது.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

ஜனவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் அறிவிக்கப்பட்டால் நிதியமைச்சகம் செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடத்தும் தனது மறுஆய்வு கூட்டத்தை முன்கூடியே நடத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: union budget 2017
English summary

End of British-era legacy? Next Budget may be presented in January

The government is looking to change the British-era legacy of presenting the Union Budget+ on the last day of February and may advance the date by a month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X