சென்னை: மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்பத் துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலமாக வேலை பெற்று வந்தன
ஆனால் இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால் நிறைய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணியை விட்டு நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவுகள் விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கும் நிலையில்
இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சிஸ்கோ
சர்வதேச சந்தையில் வன்பொருள் தயாரிப்பு மற்றும் நெட்வொர்கிங் தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் சிஸ்கோ நிறுவனம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் இரண்டாம் மிகப் பெரிய கிளை இந்தியாவில் தான் உள்ளது. இந்தியாவில் மட்டும் 11,000 ஊழியர்கள் பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் 7 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க இருப்பதாக சிஸ்கோ அறிவித்துள்ளது.
சிஸ்கோ-வின் இந்த அறிவிப்பினால் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கவலையிலும் பயத்திலும் மூழ்கியுள்ளனர்.
ஓலா
ஓலா ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனம் 18 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் டாலர் கொடுத்து டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை வாங்கியது.
இப்போது டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஓலா டாக்ஸி செயலியை பயன்படுத்தத் துவங்கிவிட்டதால் இந்நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளதாக ஓலா அறிவித்துள்ளது.
டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை ஓலா நிறுவனம் மூடுவதால் நிறுவனத்தில் 700 பேர் வரை வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபிளிப்கார்ட்
இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் சென்ற மாதம் பெயரை குறிப்பிடாத நன்றாகச் செயல்படாத 300 பணியாளர்களை வேலை வீட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 1 முதல் 2 சதவீத ஊழியர்களின் எண்ணிக்கை ஆகும்.
மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வன்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளில் இருந்து மேலும் 2,850 பணியாளர்களை வேலையை விட்டுத் துரத்தும் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் வருடாந்திர அமெரிக்க செக்யூரிட்டிஸ் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த ஆட்குறைப்பு ஜூன் 2017-க்குள் நடைபெறும் என்று கூரப்படுகிறது.
க்ரோபர்ஸ்
ஹரியானவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மளிகை பொருட்கள் விநியோக ஸ்டார்ட் அப் நிறுவனம் க்ரோபர்ஸ்.
இந்நிறுவனம் 10 சதவீத ஊழியர்கள் அதாவது 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications