டெல்லி: ஒவ்வோரு நாட்டில் உள்ள தனிநபர் சொத்து மதிப்பை கணக்கிட்டு பார்த்த ஒரு ஆய்வில் 5,600 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியா டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
உலகளாவிய செல்வம் உளவுத்துறை மற்றும் சந்தை ஆய்வு நிறுவனமான நியூ வர்ல்ட் வெல்த் என்ற அமைப்பு ஒவ்வொரு நாட்டில் உள்ள தனிநபரின் சொத்து மதிப்பையும் ஆய்வு செய்து டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டாப் 10-இல் இந்தியா
நியூ வர்ல்ட் வெல்த்-இன் ஆய்வறிக்கையின் படி 5,600 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
அமெரிக்கா
எப்போதும் போல முதல் பணக்கார நாடாக 48,900 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது.
இரண்டு மற்றும் மூன்றாவது இடங்கள்
17,400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பிடன் சீனா இரண்டாம் இடத்தையும், 15,100 பில்லியன் சொத்து மதிப்புடன் ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
டாப் 10-இல் உள்ள பிற நாடுகள்
இங்கிலாந்து 9,200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும், இதனைத் தொடர்ந்து 9,100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெர்மெனியும், 6,600 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிரான்ஸூம் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவிற்குப் பின் உள்ள நாடுகள்
இந்தியா ஏழாவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில் 4,700 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்தில் கனடாவும், 4,500 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9 வது இடத்தில் ஆஸ்த்ரேலியாவும், 4,400 பில்லியன் சொத்து மதிப்புடன் இத்தாலியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மக்கள் தொகையினால் டாப் 10 நாடுகளில் எளிதாக வந்துவிட்டது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள 22 மில்லியன் மக்கள் மட்டுமே உள்ள நிலையில் இது ஒரு மிகப்பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது.
இத்தாலி
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவும் நல்ல வலுவான நிலையில் உள்ளதாகவும், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகள் இத்தாலியை கடந்த 12 மாதத்தில் கடந்து சென்றுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
கணக்கிடப்பட்ட முறை
ஒரு தனிப்பட்ட நபரின் சொத்து, பணம், ஈக்விட்டிஸ், வணிக ஆர்வம் என அனைத்தையும் அரசின் முதலீடுகள் ஏதும் இல்லாமல் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications