இந்தியாவில் உள்ள டாப் தனியார் துறை நிர்வாகிகளின் சராசரி சம்பளம் 20 கோடி ரூபாய் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரண்டு வருடத்திற்கு முன்பு அவர்கள் வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக தற்போது சம்பளமாக இவர்கள் பெருகின்றனர்.
இந்த வளர்ச்சி அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உள்ளதா என்பது சந்தேகமே.
எல்அண்ட்டி-இன் ஏ.எம் நாயக்
2015-2016 நிதி ஆண்டின் நிர்வாகிகள் சம்பள குறித்த ஆய்வின் படி எல்அண்ட்டி-இன் ஏ.எம் நாயக் 66.14 கோடி ரூபாயுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதில் பாதிக்கும் அதிகமாக அதாவது 39 கோடி வரை இவருக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காகவே பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் விஷால் சிக்கா
இரண்டாம் இடத்தில் 48.73 கோடிகளுடன் இன்ஃபோஸிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா பெறுகிறார்.
லூபின் தேஷ் பாந்து குப்தா
மூன்றாவது இடத்தில் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லூபின் மருந்து நிறுவன தலைமை அதிகாரி தேஷ் பாந்து குப்தா 44.8 கோடி ரூபாய் பெறுகிறார்.
சுனில் மிட்டல்
2015-2016 நிதியாண்டில் 27.8 கோடி ரூபாயாக இருந்த ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டலின் சம்பளம் 30 கோடி ரூபாயாகச் சென்ற மாதம் நடந்த நிறுவத்தின் அதிகாரிகள் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜிவ் பஜாஜ்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் 22.32 கோடி ரூபாயுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
எஸ் என் சுப்பிரமணியன்
எல்அண்ட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவரான எஸ் என் சுப்பிரமணியன் 22.12 கோடி ரூபாய் சம்பளாக பெற்று ஆறாவது இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானி கடந்த எட்டு வருடங்களாக 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.
சஞ்ஜிவ் மேத்தா
ஹிந்துஸ்தான யூனிலிவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்ஜிவ் மேத்தா 13.87 கோடு ரூபாய் சம்பளமாக பெற்று எட்டாவது இடத்தில் உள்ளார்.
டி கே குரியன்
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முன்னால் தலைமை செயல் அதிகாரியான டி கே குரியன் 13.66 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
அபிதலி நீமுச்வாலா
விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி அபிதலி நீமுச்வாலா 11.96 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பவன் கோயங்கா
மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கா 11.6 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார்.


Click it and Unblock the Notifications