கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதன் ஒரு நடவடிக்கையாக 3 லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்க பணப் பரிவர்த்தனையை செய்யத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என்று நேரடி வரிக்கான மத்திய வாரியத் தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழு
கருப்புப் பணத்தை ஒழிப்பது குறித்து உச்ச நீதி மன்றம் நியமித்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் 3 லட்சம் ரூபாய்க்கு மேலாக ரொக்க பணப்பரிவர்த்தனை மட்டும் இல்லாமல் 15 லட்சம் வரை கையில் இருப்பு வைத்துக்கொள்ளவும் தடை விதக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
1 சதவீதம் வரி
வருமான வரித் துறையின் கீழ் ஏற்கனவே பண பரிவர்த்தனையின் போது 1 சதவீதம் வரி என வசூலிக்கப்படுவதாகவும், பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருப்புப் பணத்திற்கான சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எம் பி ஷா இந்த அறிக்கையை உச்ச நீதி மன்றத்தில் சென்ற மாதம் சமர்ப்பித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள முறை
கணக்கில் வராத மிகப் பெறும் தொகை வெளியில் உள்ளதாகத் தெரிவித்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, இது பற்றி பல வெளிநாடுகளில் உள்ள முறைகளை எடுத்துக்காட்டாக குறியுள்ளதாகவும் கூரப்படுகிறது.
தண்டனைக்குரிய குற்றம்
மூன்று லட்சத்திற்கும் மேலாக பணப்பரிவர்த்தனை செய்யும் செய்யும் போது அந்தப் பரிவர்த்தனையை சட்டவிரோத மற்றும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை
அதிகபட்ச அளவான 15 லட்சம் ரூபாய் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications