மும்பை: நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மிக முக்கிய வர்த்தகமாக இருந்த மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அதிகளவிலான நச்சுத்தன்மை உள்ளதைத் தொடர்ந்து இதன் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் மத்திய அரசு மற்றும் இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு முழுமையாகத் தடை விதித்தது.
இதனால் இந்திய நூடுல்ஸ் விற்பனை சந்தையில் மூடிச் சூடா மன்னாகத் திகழ்ந்த மேகி மள மளவெனச் சரிந்து 75 சதவீத வர்த்தகத்தை இழந்தது நெஸ்லே இந்தியா.
ஜூன் மாதத்தில் தடைகளை மக்கள் மத்தியில் மீண்டும் நன்மதிப்பைப் பெற்ற மேகி நூடில்ஸ் தான் இழந்த முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நெஸ்லே இந்தியா
இந்நிறுவன தயாரிப்புகள் இந்திய சந்தையில் அதிகளவில் இருந்தாலும், மேகி நூடுல்ஸ் மையமாக வைத்தே பிற பொருட்கள் விற்பனை செய்யட்டு வருகிறது. காரணம் நெஸ்லே இந்தியா இத்தயாரிப்புக்கு செய்த அதிகளவிலான விளம்பரம்.
இதனால் இந்நிறுவனத்தின் 75 சதவீத வர்த்தகம் மேகி நூடில்ஸ் விற்பனையைச் சார்ந்துள்ளது.
தடை
இத்தகைய சூழ்நிலையில் தான் இந்திய மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் அளவிற்கு அதிகளவிலான நச்சுப்பொருட்கள் மேகி நூடுல்ஸில் கலந்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
அதிகளவிலான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதைப் பல கட்ட சோதனைகள் மூலம் உறுதி செய்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு (FSSAI) இதன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்தது.
இதனால் நெஸ்லே நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவில் 80 சதவீதம் அளவில் பாதிக்கப்பட்டது.
தடைகளைத் தாண்டி விற்பனை
இப்பிரச்சனைக்கு விரைவான தீர்வை காண்பித்த நெஸ்லே நிறுவனத்தின் புதிய பாதுகாப்பான மேகி நூடுல்ஸூக்குத் தடை நீக்கப்பட்டுக் கடந்த நவம்பர் மாதத்தில் வெறும் 10.9 சதவீத சந்தை விற்பனையைக் கொண்டு களத்தில் இறங்கியது நெஸ்லே இந்தியா.
9 மாதம் போராட்டம்
தடைகள் நீக்கப்பட்டுச் சந்தை விற்பனைக்கு வந்த மேகி நூடுல்ஸ் வெறும் 9 மாத காலத்திற்குள் மொத்த இந்திய நூடுல்ஸ் விற்பனை சந்தையில் 57.1 சதவீத சந்தையைப் பிடித்துத் தான் இழந்த முதல் இடத்தை மீண்டும் ஜூலை மாதத்தில் பிடித்துள்ளது நெஸ்லே.
புதிய அறிமுகம்
நவம்பர் மாதத்தில் 10.9 சதவீதமாக இருந்த மேகி நூடுல்ஸ் மார்ச் 2016ஆம் ஆண்டு 51 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் நெஸ்லே இந்தியா மேகி கப்பா நூடுல்ஸ், மேகி ஹாட்ஹெட்ஸ் மற்றும் ‘No Onion No Garlic' ஆகிய புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இந்தியாவில் மேகி தடை செய்யப்பட்ட காலத்தில் Yippee, டாப் ராமென், சிங் சீக்ரெட், க்னார் சூப்பி நூடுல்ஸ் போன்ற நிறுவனங்கள் வர்த்தகச் சந்தையைப் பிடிக்க முயற்சி செய்தாலும், மிகவும் கணிசமான அளவுகளிலேயே வர்த்தகத்தைப் பிடித்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் மேகி நூடில்ஸ் நிறுவனம் தடைக்கு முன் இழந்த மொத்த சந்தையும் பிடித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications