ரகுராம் ராஜனை விட அதிக சம்பளம் வாங்கும் 4 வங்கித் தலைவர்கள்

பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி நிர்வாகிகளுக்கு இடையேயான சம்பள போர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

உயர் மட்டத்தில் உள்ள பொதுத் துறை வங்கி ஊழியர்கள் குறைவான சம்பளம் வாங்கும் போது திறமையானவர்கள் என்று கூறப்படுபவர்களை பொதுத் துறை வங்கிகளில் பணியில் அமர்த்துவது என்பது முடியாத ஒன்று என்று அன்மையில் ரகுராம் ராஜன் கூறியிருந்தார்.

எனவே நாம் இங்கு பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கி நிர்வாகிகள் இடையேயான சம்பள ஒப்பீட்டைப் பார்ப்போம்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த பட்டியலில் உள்ள அனைவருக்கும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனை விடப் பல மடங்கு சம்பளம் வழங்கப்படுவது ஆகும்

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜனின் சம்பளம் ஜூலை 2015 சம்பள உயர்வின் படி வருடத்திற்கு 23.84 லட்சம் ரூபாய்.

இதுவே மாதத்திற்கு 1.98 லட்சம் ரூபாயும், ஒரு நாளுக்கு 6,600 ரூபாயும், ஒரு மணி நேரத்திற்கு 275 ரூபாயும், ஒரு வினாடிக்கு 0.076 ரூபாய் ஊதியமாக ரகுராம் ராஜன் பெறுகிறார்.

 

சந்தா கோச்சார்

சந்தா கோச்சார்

இந்திய ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார் 2015-2016 நிதி ஆண்டின் படி வருடத்திற்கு 4.76 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

இவரின் மாத சம்பளம் ரூ.39.6 லட்சம் ரூபாய், ஒரு நாள் சம்பளம் 1.32 லட்சம் ரூபாய், ஒரு மணி நேரத்திற்கு 5,500 ரூபாய், ஒரு நிமிடத்திற்கு 91.66 ரூபாய், ஒரு வினாடிக்கு 1.527 ரூபாய். இவருடைய மாத சம்பளத்தை விட ரகுராம் ராஜனின் வருடாந்திர சம்பளம் குறைவாகும்.

 

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் சம்பளமும் ஆர்பிஐ கவர்னரின் சம்பளத்தை விட அதிகம்.

இவருடைய ஆண்டு சம்பளம் 31.1 லட்சம் ரூபாய், மாத சம்பளம் 2.59 லட்சம் ரூபாய், ஒரு மணி நேரத்திற்கு 360 ரூபாய், ஒரு வினாடிக்கு 0.01 ரூபாய்.

 

ஆதித்யா பூரி

ஆதித்யா பூரி

எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநரான ஆதித்யா பூரியின் சம்பளம் தான் இந்தப் பட்டியலிலே அதிகம்.

ஆதித்யா பூரியின் ஆண்டு சம்பளம் 9.7 கோடி ரூபாய், மாதம் 80.83 லட்சம் ரூபாய், ஒரு நாளைக்கு 11,208 ரூபாய், ஒரு நிமிடத்திற்கு 186.8 ரூபாய், ஒரு வினாடிக்கு 3.11 ரூபாய்.

 

ஷிகா சர்மா

ஷிகா சர்மா

ஆக்ஸிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான ஷிகா சர்மாவின் வருடாந்திர சம்பளம் 2015-2016 நிதியாண்டின் படி 5.5 கோடி ரூபாய்.

இவருடைய மாத சம்பளம் 45.8 லட்சம், ஒரு நாளைக்கு 1.52 லட்சம், ஒரு மணி நேரத்திற்கு 6,333 ரூபாய், ஒரு நிமிடத்திற்கு 105.5 ரூபாய், ஒரு நொடிக்கு 1.759 ரூபாய்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+