சென்னை: வேகத்தை விரும்பு இன்றைய ஹைடெக் இளைஞர்களைக் கவரும் நோக்கத்துடன் மஹிந்திரா நிறுவனம் சக்திவாய்ந்த மோஜோ இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த சில வருடங்களில் இந்தியாவில் அதிவேக இரு சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஆடம்பர ரகத்தில் இருக்கும் பல வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதனை மையமாக வைத்தே நீண்ட காலமால இரு சக்கர வாகன விற்பனையில் தனக்கான ஒரு இடத்தைப் பிடிக்க மஹிந்திரா நிறுவனம் போராடி வரும் நிலையில் மஹிந்திரா மோஜோ-வை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய இரு சக்கர வாகனச் சந்தையில் 300சிசி திறன் கொண்ட வாகனங்களில் கவாசகி நிஞ்சா-வின் விலை 4,11,177 ரூபாய்.
இந்நிலையில் மஹிந்திரா மோஜோ- 300சிசி சக்தி வாய்ந்த இந்த இரு சக்கர வாகனம் அதிகப்படியாக 160Kmph வேகத்தை எட்டுகிறது. இதனாலேயே இளைஞர்களுக்கு இதன் மீது ஒரு கண். இதன் விலை தமிழ்நாட்டில் 1,90,000 முதல் 1,98,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மஹிந்திரா மோஜோவின் துள்ளலான விளம்பரம் உங்களுக்காக.
'மஹிந்திரா மோஜோ' பற்றிய உங்களது
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications