பெங்களுரூ: விப்ரோ நிறுவனத்தின் ஹெல்த்கேர் மற்றும் லைப்சையின்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியான சங்கீதா சிங், 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் ஹெல்த்கேர் மற்றும் லைப்சையின்ஸ் பிரிவின் நிர்வாகத் துணை தலைவராகவும், தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்க உள்ளார்.
விப்ரோ நிறுவனத்தில் சுமார் 23 வருடம் பணியில் இருந்த சங்கீதா சிங் தற்போது சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் சேர உள்ளார்.
சங்கீதா சிங்
விப்ரோ நிறுவனத்தில் 23 வருடம் பல முக்கியப் பதவிகளில் இருந்த சங்கீதா சிங் கடந்த டிசம்பர் மாதம் இந்நிறுவனத்தில் வெளியேறினார்.
இந்நிலையில் ஹெல்த்கேர் மற்றும் லைப்சையின்ஸ் பிரிவில் மிதமான தொடர் வளர்ச்சியைச் சந்தித்து வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் சங்கீதா சிங் இணையப்போவதை இன்போசிஸ் நிதிச்சேவை துறை தலைவர் மோஹித் ஜோஷி உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்போசிஸ்
இந்நிறுவனத்தின் ஹெல்த்கேர் மற்றும் லைப்சையின்ஸ் பிரிவின் வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பில் நியமிக்கப்படும் சங்கீதா சிங் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் சர்வதேச வர்த்தகத்தைக் கவனிப்பார் எனத் தெரிகிறது.
மனிஷ் டாடன்
ஹெல்த்கேர் மற்றும் லைப்சையின்ஸ் பிரிவின் தலைவராக இருந்த மனிஷ் டாடன் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி சிஎஸ்எஸ் கார்ப் நிறுவனத்தின் சீஇஓ-வாக இணைந்தார்.
மனிஷ் டாடன் வெளியேற்றத்தின் வாயிலாக உருவான காலி பணியிலேயே தற்போது சங்கீதா சிங் நியமிக்கப்படுகிறார்.
விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனமே பல உயர் அதிகாரிகளின் வெளியேற்றத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட நிலையில், இவரது நியமனத்திற்குப் பின் இன்போசிஸ் நிறுவனத்தில் காலங்காலமாக இருந்த பல அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறினர்.
அதிலும் கடந்த 6 மாத காலத்தில் இதன் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
டிசம்பரில் இன்போசிஸ்
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு டிம்பர் மாதத்தில் சங்கீதா சிங் இன்போசிஸ் நிறுவனத்தில் இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்போசிஸ் மற்றும் சிங் ஆகிய இருதரப்பு உறுதி செய்யவில்லை.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications