டெல்லி: நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை அளிக்கும் நிறுவனமான இண்டிகோ நிறுவனம் 'Lite Fares' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் பயணிகள் குறைவான லக்கேஜ் கொண்டு வந்தால் அவர்களுக்குக் குறைவான கட்டணத்தில் விமானப் பயணச் சேவை அளிக்கப்படுகிறது.
லாபம்...
இனி இண்டிகோ நிறுவனத்தில் 15 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யத் திட்டமிடும் விமானப் பயணிகள் 7 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட லக்கேஜ் கொண்டு வந்தால் விமானக் கட்டணத்தில் 200 ரூபாய் வரையிலான சலுகையை அளிப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணிப்பெண்கள்
விமானத்தில் எடை குறைவாக இருந்தால் எரிபொருள் பயன்பாடும் குறையும் இதுவே இத்தகைய சலுகைக்குக் காரணம். இதற்காகத் தான் விமானப் பணிப்பெண்களும் கூடக் குறைவான எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள் (தனியார் விமான நிறுவனத்தில் மட்டும்).
காஃபி அடித்தது இண்டிகோ
இண்டிகோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 'ஹேன்ட்பேக் ஒன்லி' என்ற ஆஃபரை ஒரு வருடத்திற்கு முன் அறிவித்தது. ஒரு வருடத்திற்குப் பின் இதே திட்டத்தை இண்டிகோ நிறுவனம் காஃபி அடித்துள்ளது.
40% சந்தை
ஆதித்யா கோஷ் தலைமையிலான இண்டிகோ ஏர்லையன்ஸ் இந்திய சந்தையில் சுமார் 40 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
கடந்த ஜூன் மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 'SpiceSaver' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தில் நீங்கள் ரிட்டன் டிக்கெட் பதிவு செய்தால் 500 ரூபாய் வரையிலான தள்ளுபடியை விமானப் பயணிகள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications