இலவச 'ஜியோ' சேவை அதிர வைக்கும் உண்மை பின்னணி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: தினமும் எல்லா மால்கள் மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களிலும் 9:30 முதல் வரிசையில் காத்திருந்து ஜியோ சிம் கார்டுகளை வங்கி கொண்டு இருக்கும், வாங்க இருக்கும் மக்கள் முதலில் இதைப் படித்துவிட்டு வாங்குவதா? இல்லையா? என்று முடிவு செய்யுங்கள்.

 

விளம்பரம் இல்லாத ஒரு பெரிய மார்க்கெட்டிங்

விளம்பரம் இல்லாத ஒரு பெரிய மார்க்கெட்டிங்

வணிக ரீதியாக 4ஜி சேவையைத் துவங்குவதற்கு முன்பே எல்லோர் கையிலும் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவையைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஜியோ முயல்வது விளம்பரம் இல்லாத ஒரு பெரிய மார்க்கெட்டிங் உத்தியே.

ரிலையன்ஸ் ஆர்காம்

ரிலையன்ஸ் ஆர்காம்

இதே போல தான் முதன் முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆர்காம் மொபைல் சேவையைத் துவங்கு போதும் ஏற்பட்டது. 501 ரூபாய்க்கு இரண்டு ஃபோன்கள், இரண்டு எண்களுடனும் இலவசமாகப் பேசிக்கொள்ளலாம். பிற எண்களுக்குத் தொடர்பு கொள்ள 1 ரூபாய் எனத் தனது சேவையை அறிமுகப்படுத்தியது.

மார்க்கெட்டிங் உத்தி
 

மார்க்கெட்டிங் உத்தி

அப்போது வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமுகவலைத் தளங்கள், ஊடகங்கள் போன்றவற்றின் வளர்ச்சி அதிகம் இல்லாததால் தெரு தெருவாகக் கூவி தனது விற்பனையை செய்த நிறுவனத்தின் மொபைல் ஃபோன்கள் என்ன ஆகின என்பது அனைவருக்கும் தெரியும்.

அதே போன்று தான் இதுவும் ஒரு மார்க்கெட்டிங் உத்தியே தவிர வேறு ஏதும் இல்லை.

 

ஏன்?

ஏன்?

தனது முழு சேவையையும் விரிவு படுத்தி துவங்குவதற்கு முன்பே ரிலையன்ஸ் ஏன் வாடிக்கையாளர்களிடம் தனது சிம் கார்டுகளை கொண்டு சேர்க்க முயல்வது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

ஆகஸ்ட் 15 முதல்

ஆகஸ்ட் 15 முதல்

90 நாட்களுக்கு இலவசமாக ஜியோ முன்னோட்ட சேவையை அளித்துவிட்டு பின்னர் எப்படியாவது நம்மிடம் இதை வசூலிக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதலே தொடங்க இருப்பதாக அறிவிப்பு வந்தது ஆனால் இதுவரை தொடங்கப்படவும் இல்லை.

இதைப் பற்றி எல்லாம் விரிவாகப் பார்க்கும் முன்பு தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ எப்போது முழுமையாக வணிக செயல்பாட்டிற்கு வரும் என்பதைப் பார்ப்போம்.

 

வணிகரீதியாக எப்போது?

வணிகரீதியாக எப்போது?

இப்போது வரும் தகவல்களின் படி செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி இதைப்பற்றி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காகப் பங்குதாரர்கள் 2015 டிசம்பர் முதல் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஜியோ முன்னோட்ட ஆஃபர் சட்ட திட்டத்திற்குட்பட்டு செயல்படுகிறதா?

ஜியோ முன்னோட்ட ஆஃபர் சட்ட திட்டத்திற்குட்பட்டு செயல்படுகிறதா?

ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையுடன் ரிலையன்ஸ் நிறுவனம் இப்படி இலவசமாகச் சேவையை அளிப்பது முறைகேடானது என்று இது குறித்து முறையிட்டுள்ளது.

ஸ்பெக்டர்ம் பயன்படுத்துவதற்கான கட்டணம்

ஸ்பெக்டர்ம் பயன்படுத்துவதற்கான கட்டணம்

அரசுக்கு ஸ்பெக்டர்ம் பயன்படுத்துவதற்கான கட்டணம் செலுத்தாமல், வணிக ரீதியாகத் துவங்கவும் இல்லாமல் பொதுவாக தனது வர்த்தகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற 90 நாட்கள் இலவச அழைப்பு மற்றும் தரவு சேவையை அளிப்பது மிகப் பெரிய வாடிக்கையாளர் கையகப்படுத்தல் முறையே ஆகும்.

 

குரல் அழைப்புகள்

குரல் அழைப்புகள்

இது வரை ஜியோ நெட்வொர்க்கினை பயன்படுத்துபவர்களுக்குச் சரியான தெளிவான குரல் அழைப்பு சேவையை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையில் வழங்கவில்லை.

நெட்வொர்க் பகிர்தல்

நெட்வொர்க் பகிர்தல்

அதுமட்டும் இல்லாமல் ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஜியோ நெட்வொர்க்குடன் தங்கள் நெட்வொர்க்கை பகிர மறுக்கின்றன. இதனால் ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்களுக்கு தற்போதைய நிலைப் படி 65 சதவீதம் கால் ட்ராப் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

பிற நெட்வொர்க்குகளின் ஒத்துழைப்பு இல்லாததே ஜியோ நெட்வொர்க்கின் தாமதத்திற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

மொபைல் எண் போர்ட்டபிளிட்டி

மொபைல் எண் போர்ட்டபிளிட்டி

ரிலையன்ஸ் ஜியோ சேவை அதிகாரப் பூர்வமாக துவங்கப்படும் வரை உங்கள் பழைய எண்ணை மொபைல் எண் போர்ட்டபிளிட்டி வாயிலாக மாற்றுவதினால் பிற நெட்வொர்க்குகளில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள இயலாது, அதிக கால் ட்ராப் அழைப்புகள் போன்றவற்றினால் மிகுந்த சிக்கல்கள் ஏற்படும்.

ஜியோ முன்னோட்ட ஆஃப்ர் முடிந்த பிறகு என்ன ஆகும்?

ஜியோ முன்னோட்ட ஆஃப்ர் முடிந்த பிறகு என்ன ஆகும்?

90 நாட்கள் இலவச சேவை முடிந்த உடன் புதிய டாரிஃப் திட்டத்திற்காக நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டி வரும்.

தற்போது வெளியாகி உள்ள டாரிஃப் திட்டங்களின் படி 1 எம்பி தரவிற்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

டாரிஃப் கட்டணங்கள்

டாரிஃப் கட்டணங்கள்

குரல் அழைப்புகள் கட்டணங்கள் ஒரு விநாடிக்கு 2 பைசாவும், குறுந்தகவல்களுக்கு 1 ரூபாயும் வசூலிக்கப்படும் கூறப்படுகிறது. வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள விநாடிக்கு 5 பைசா கட்டணங்களும், ரோமிங்கில் இருக்கம் போது இன்கம்மிங் அழைப்புகளுக்கு 45 பைசாவும், அவுட்கோயிங் அழைப்புகளுக்கு 80 பைசாவும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கோரிக்கை

கோரிக்கை

இந்தியாவில் பலர் இந்த ஜியோ நெட்வொர்க் சிம் கார்டுக்காக காத்திருக்கும் நிலையில் அம்பானிக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் ‘விரைவில் முழு செவையை அளிக்கவும்' இல்லை என்றால் உங்களை நம்பியும், உங்களது இலவசம் என்ற வியாபர உத்தியையும் நம்பி சிம்மை வாங்கும் வாடிக்கையளர்கள் ஆஃபர் முடிந்தவுடன் தூக்கி போட்டு விடுவார்கள் உன்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

 இலவச 4ஜி சிம்

இலவச 4ஜி சிம்

<strong>ஐடி ஊழியர்களுக்கு இலவச 4ஜி சிம் கார்டு: ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி..!</strong>ஐடி ஊழியர்களுக்கு இலவச 4ஜி சிம் கார்டு: ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி..!

'மஹிந்திரா மோஜோ'

'மஹிந்திரா மோஜோ'

இளைஞர்களை சுண்டி இழுக்கும் 'மஹிந்திரா மோஜோ'..!இளைஞர்களை சுண்டி இழுக்கும் 'மஹிந்திரா மோஜோ'..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things You Didn’t Know About Reliance Jio 4G & the ‘Free’ Hype

Things You Didn’t Know About Reliance Jio 4G & the ‘Free’ Hype
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X