சென்னையில் சொந்த வீடு, நிலம் வாங்கும் முன் இதை படிங்க..!

சென்னை: சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் கனவாக உள்ளது. ஆனால் எந்த இடத்தில் வீடு வாங்குவது, எங்கு வாங்கினால் வெள்ள பாதிப்பில் இருந்து விடுபடலாம், வில்லங்கம் இல்லாமல் வாங்குவது எப்படிப் போன்ற பல கேள்விகள் வீடு வாங்குபவர்களின் மனதில் எழுகிறது.

ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பு இதுகுறித்துப் பலரிடம் விசாரித்துப் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக நீங்கள் பலநாட்களையும், ஓரளவு பணத்தையும் நீங்கள் இழந்தாக வேண்டும்.

ஆனால் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இண்டர்நெட்டில் உங்களுக்குத் தேவையான அனைத்து விபரங்களும் தற்போது கிடைக்கின்றது. இதுகுறித்த விபரங்களைத் தற்போது விரிவாகப் பார்ப்போம்

சென்னை

சென்னை

ஒரு இடத்தைப் பற்றிய விளம்பரத்தில் சென்னையில் இருந்து மிக அருகில் இருக்கின்றது என்று கூறுவார்கள். ஆனால் போய்ப் பார்த்தால்தான் தெரியும் அது சென்னை அல்ல செங்கல்பட்டு என்று.

இதேபோல் ஒருசில இணையதளங்களிலும் தவறான தகவல் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற நேரங்களில் பொதுவாக அரசு இணையதளங்களைப் பார்ப்பதே சாலச்சிறந்தது.

 

வில்லங்கம்

வில்லங்கம்

ஒரு இடத்தின் விலை, பதிவு செய்யும் முறைகள், வில்லங்கம் தொடர்பான கேள்விகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளப் பல அரசு இணையதளங்கள் நமக்கு உதவுகின்றன.

சென்னையில் இடம் அல்லது வீடு வாங்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த விபரங்களை அளிக்கும் உபயோகமான இணையதளங்கள் குறித்துத் தற்போது பார்ப்போம்,.

 

சிஎம்டிஏ சென்னை

சிஎம்டிஏ சென்னை

http://www.cmdachennai.gov.in/

சென்னை மெட்ரோ பாலிட்டியன் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி என்ற அமைப்பின் இணையதளமான இதில் ஒரு கட்டிடத்தின் பிளான் அப்ரூவல் ஆகியுள்ளதா, அப்ரூவல் ஆகியுள்ள லே-அவுட்டின் காப்பி, இடம் உள்ள பகுதியின் முழு விபரங்கள் கிடைக்கும். மேலும் ஒரு இடத்தின் மாஸ்டர் பிளான் குறித்த தகவல்களும் கிடைக்கும். அதுமட்டுமின்றி ஒரு இடம் கட்டி முடிக்கப்பட்ட கம்ப்ளீசன் சர்டிபிகேட்டையும் நாம் பார்க்கலாம்.

 

சென்னை கார்பரேஷன்

சென்னை கார்பரேஷன்

http://www.chennaicorporation.gov.in/

சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த இணையதளத்தில் சென்னையைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாகச் சென்னையின் வரலாறு, சென்னையின் அமைப்பு உள்படப் பல விபரங்கள். ஒரு கட்டிடத்தின் பில்டிங் பிளான் மற்றும் டவுன் பிளான் ஆகியவற்றையும் இந்த இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம். ஒரு பில்டிங்கை எந்த நிறுவனம் கட்டியது, அந்நிறுவனத்தின் முழுவிபரம் இதில் உள்ளது.

 

தமிழ்நாடு பதிவுத்துறை

தமிழ்நாடு பதிவுத்துறை

http://www.tnreginet.net/

தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மெண்டுக்கு சொந்தமான இந்த இணையதளத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் உரிய ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம், ஸ்டாம்ப் கட்டணம், மற்றும் சர்க்கிள் கட்டணம் எவ்வளவு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் எந்தப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் முழு விபரங்களையும், வில்லங்க சர்டிபிகேட்டையும் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தித் தெரிந்து கொள்ளலாம்,

 

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

http://www.chennai.tn.nic.in/

வீடு வாங்குபவர்களுக்குத் தமிழக அரசு அளிக்கும் அனைத்துவித சலுகைகள் குறித்த முழுவிபரங்கள் இந்த இணையதளத்தில் காணப்படும். நமக்குத் தேவையான டாக்குமெண்ட்டுகளை ஆன்லைன் மூலமே தேவையான கட்டணத்தைச் செலுத்தி நகல் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஒரு வீட்டிற்கு அடிப்படைத் தேவைகளான தண்ணீர் கனெக்சன், மின்சாரக் கனெக்சன் மற்றும் வேறு எதாவது புகார்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் இருக்கும்.

 

தவறான வழிகாட்டுதல்

தவறான வழிகாட்டுதல்

சென்னையில் வீடு வாங்க விரும்புபவர்கள் புரோக்கர்களின் தவறான வழிகாட்டலில் ஏமாந்துவிடாமல் மேற்கண்ட இணையதளங்களுக்குச் சென்று தேவையான அனைத்து விபரங்களையும் சேகரித்து அதன்பின்னர் ஒரு நல்ல வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று வாங்கவும். அப்புறம் என்ன நீங்களும் சென்னையில் சொந்த வீடு வைத்திருக்கும் பட்டியலில் இணைந்துவிடுவீர்கள்.

 உண்மை பின்னணி

உண்மை பின்னணி

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+