கேப்டன் 'தோனி' உடனான 11 வருட ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது 'பெப்சி'..!

மும்பை: 11 வருடத்திற்குப் பிறகு தோனியுடன் போடப்பட்டு வந்த ஒப்பந்தத்தை பெப்சிகோ நிறுவனம் முடித்துக் கொண்டது.

ஒரு நாள் மற்றும் டிவெண்டி 20 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை சரிந்து வருவதை அடுத்து இவருடன் போடப்பட்டு வந்த ஒப்பந்தத்தை மறுபடியும் தொடர்வதை நிறுவனங்கள் தொடர்ந்து தவிர்த்து வருகின்றன.

2005 முதல்

2005 முதல்

இப்போது 35 வயதாகி உள்ள தோனி அணியில் படி படியாக உயர்ந்து நாட்டின் மிக வெற்றிகரமான கேப்டணாக உருவாகினார். இவர் வெற்றி பெறாத போட்டிகளே இல்லை என்ற நிலையில் பெப்சி கோலா மற்றும் லேஸ் இரு நிறுவனங்களின் விளம்பர தூதராக இருந்து வந்தார்.

‘ஓ எஸ் அபி' மற்றும் ‘சேஞ் தி கேம்' என்ற இரண்டும் இந்நிறுவனத்தின் மிகப் பெரிய பிரச்சாரங்கள் ஆகும். 2005 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்துடன் தொடர்பில் தோனி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடப்பு பெப்சிகோ முகங்கள்

நடப்பு பெப்சிகோ முகங்கள்

7அப், மவுண்டெய்ன் டீவ் பானங்கள் மற்றும் குர்குரே நொறுக்கு தீனிகள் போன்ற தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் பெப்சிகோ நிறுவனம் இதன் வரலாற்றில் எப்போதும் விளையாட்டு மற்றும் பாலிவுட்டில் உள்ள டாப் ஏ-கிளாஸ் பிரபலங்களுடன் மட்டுமே தனது ஒப்பந்தத்தைத் தொடரும்.

இப்போது பெப்சிகோ நிறுவனத்தின் முகங்களாக இருப்பது கிரிக்கெட் விளையாட்டு வீரை விராத் கோஹ்லி மற்றும் நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் பாரிநீத்தி சோப்ரா ஆகியோர் உள்ளனர்.

 

18 பிராண்டுகள்

18 பிராண்டுகள்

2014 ஆம் ஆண்டு வரை பெப்சி, ரீபோக், பூஸ்ட், டாபர், சோனி, டிவிஎஸ் மோட்டார்ஸ், வீடியோகான், ஓரியண்ட் ஃபேன்ஸ் மற்றும் பிக் பஜார் என தோனி 18 பிராண்டுகளின் விளம்பர தூதராக 10 முதல் 12 கோடி வரை பெற்று வந்தார்.

லாவா மொபைல்ஸ், ஜிஎஸ்கே'வின் பூஸ்ட் என இப்போது இந்தப் பட்டியலில் 10 நிறுவனங்களுக்கும் குறைவான நிறுவனங்களே உள்ளன.

பெப்சி உட்பட சோனி டிவி மற்றும் டாவர் நிறுவனங்களும் தோனியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரபலியில் இருந்து தோனி தானாகவே வெளியேரியது குறிப்பிடத்தக்கது

 

பெரிய பங்குகள்

பெரிய பங்குகள்

உடற்பயிற்ச்சி உபகரணங்கள் தயாரிக்கும் ஸ்போர்ட்ஸ் ஃபிட், ஃபிட்சோல் எனப்படும் விளையாட்டு சில்லறை நிறுவனம் மற்றும் மஹி ரேசிங் அணியில் பெரும் பங்குதாரராக தோனி உள்ளார்.

பிப்ரவரை மாதம் ரிதி குழுமத்தின் லைஃப்ஸ்டைல் பிராண்ட் 7 நிறுவனத்திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

 

வருவாய்

வருவாய்

ஃபோர்ப்ஸ் இதழின் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஒரு பட்டியலில் 27 மில்லியன் டாலர்கள் சம்பத்தது மற்றும் உலகின் மிக அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஃபோர்ப்ஸ் நிறுவனம் இவரது சம்பளம் மற்றும் தொழில்முறை வருவாயை 4 மில்லியன் டாலர்களாகக் கணக்கிட்டுள்ளது.

பல நிறுவனங்கள் தொனியை தங்களது விளம்பர தூதர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான காரணம் ஒரு வருட ஒப்பந்தத்திற்கு இவர் கேட்கும் அதிகபட்ச விலையான 8 கோடி ரூபாயே என்று கூறப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+