சென்னை: மேகி நூடில்ஸ், சாக்லேட், பால் பொருட்கள் போன்ற உணவு பொருட்களை தயாரித்து இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள நெஸ்லே நிறுவனம் இப்போது குழந்தைகளுக்கான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு என்ற விளம்பரத்துடன் நெஸ்லே சீரீக்ரோவ் (Ceregrow) என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் பால், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை உள்ளதாகவும், இரும்புச் சத்துடன் 15 விதமான வைட்டமின்கள் மற்றும் தாது சத்துகளுக்கான கலவையாக இருப்பதாகவும் இதை ஒரு முறை உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஒரு நாள் தேவையான 17 சதவீத இரும்புச் சத்தும், 25 சதவீத வைட்டமின் ஏ, சி, ஈ, கால்சியம் போன்றவற்றை இது அளிக்கும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
மேகி நூடில்ஸ் மட்டுமே நம்பி இல்லாமல் காலை உணவில் தானிய உணவு வகைகளுடன் நுழைய நெஸ்லே முயல்கிறது என்று தொழில் வல்லுநர்கள் இது பற்றி கூறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் காலை தானியங்கள் உணவு சந்தை 22.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் இந்திய காலை உணவு சந்தை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
மேகி நூடல்ஸ் இந்தியாவில் தடை விதிப்பதற்கு முன்பு நெஸ்லே நிறுவனத்தின் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தை இந்தியாவில் இருந்து இந்நிறுவனம் பேற்று வந்ததாகவும் ஆனால் இப்போது அதில் பாதியே இப்போது வருமான பெறுவதாக கூறப்படுகிறது.
இது பற்றி இந்திய நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன் கூறுகையில் இந்திய இளைஞர்களுக்காகவே மேலும் 20 முதல் 25 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications