மும்பை: இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்திய கொண்டுள்ள வளத்திற்கும் ஆற்றலுக்கும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டும். ஆனால் நாம் சந்தித்தது மிகவும் குறைவு என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், 2015-16ஆம் மத்திய வங்கியின் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாட்ஷா-வாக இருக்க வேண்டிய இந்திய பொருளாதாரம் மாணிக்கமாக உள்ளது.
கடந்த 3 வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய ரகுராம் ராஜன் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதியன்று தனது பணியில் இருந்து விடைபெறுகிறார். இந்நிலையில் 2015-16ஆம் ஆண்டின் மத்திய வங்கியின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளார். வருடாந்திர அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற சரக்கு மற்றும் சேவை வரித் திட்டத்தைப் போல் நாட்டில் சில முக்கியத் திட்டங்களை நடைமுறை படுத்துவதன் வாயிலாக இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என ராஜன் கூறினார். அதேபோல் பருவமழையின் மூலம் நாட்டில் அதிகளவிலான உற்பத்திகள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் ஆகியவை இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊந்து சக்தியாக அமையும் எனவும் கூறினார். உர்ஜித் பட்டேல் கவர்னர் அரியணையில் உட்கார இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் கட்டுப்பத்தல், வணிக வங்கிகள் வட்டி விகித்தை குறைத்தல், அதனின் எதிரொலியைக் கணித்தல், இருப்புநிலையைச் சரியான நிலையில் வைத்திருப்பது ஆகியவையே இந்திய மத்திய வங்கியின் முக்கியப் பணி என ரகுராம் ராஜன் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார். பணவீக்கம் குறைந்தபின் வட்டி விகிதத்தைக் குறைப்பதே சிறந்தது. நாட்டில் பணவீக்கம் குறைக்கப்படாமல் வட்டியைக் குறைத்தால் அதிகளவிலான பொருளாதார மற்றும் வர்த்தக நெருக்கடி உருவாகும் என்றும் அவர் கூறினார். மேலும் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த வங்கிகள் பரிமாற்ற வளர்ச்சியை நோக்கிய செல்ல வேண்டும். அதனினும் முக்கியமானது வங்கிகள் தங்களது இருப்பு நிலை அறிக்கையை வலிமையான வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்திய வங்கிகள் அடுத்தத் தலைமுறை சேவைகளில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த வேண்டும் இதன் மூலம் வங்கிகளில் நிர்வாகப் பணிகள் எளிமையாக்கப்படுவதுடன், செலவுகள் அதிகளவில் குறைந்து இருப்புநிலை அறிக்கையும் வலிமையடைய உதவும் என ராஜன் கூறினார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 30 புள்ளிகளை உயர்த்தி 7.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் பருவமழை கணிசமாக அதிகரித்துள்ளதால் விவசாயத் துறை உற்பத்தி 6.5 சதவீதம் வரை உயரும் எனவும் தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பணவீக்கம் இன்னமும் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதைக் கண்டு தான் மிகவும் வருந்துவதாகவும் குறிப்பிட்டார் ராஜன்.
ரகுராம் ராஜன்
பொருளாதார வளர்ச்சி
பருவமழை
புதிய கவர்னர்
வட்டி வகிதம்
புதிய வழிகள்
செலவுகள்
வளர்ச்சி அளவு
6.5 சதவீத உயர்வு..
கவலை
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications