டெல்லி: நெஸ்லே நிறுவனத்தின் மேகி தயாரிப்பில் கலப்படம் இருந்ததை அடுத்து அந்த தயாரிப்பின் விளம்பரங்களில் நடித்த அமிதாப்பச்சன் வரை பிரச்சனையை ஏற்படுத்தியது.
பின்னர் இதேப்போன்று மகேந்திரசிங் தோனி மீதும் அமரப்ள்ளி என்ற ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரத்தில் நடித்ததற்காக அந்த நிறுவனத்தின் கீழ் வீடு வாங்கிய வாடிக்கையாளர்கள் அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வாக்கெடுப்பு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் மசோதா
இதுகுறித்த மசோதா ஒன்று 2015 ஆம் ஆண்டு மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவில் போலியான பொருட்களின் விளம்பரங்களில் நடித்தால் பிரபலங்களை அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
அருண் ஜேட்லி தலைமையில் கூட்டம்
இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை போலியான பொருட்களின் விளம்பரங்களில் நடித்தால் பிரபலங்களுக்கு சிறைத்தண்டனை அளிக்க வேண்டுமா என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
சிறை தண்டனை அளிப்பது தவறு
அப்போது நுகர்வோர் விவகார அமைச்சகம் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்ற கூறிய நிலையில், சில மூத்த அமைச்சர்கள் இதற்குச் சிறை தண்டனை அளிப்பது தவறானது என்று கூறியதாகவும் அதற்காக மாற்று வழியை அமல்படுத்த உள்ளதாகவும், அதில் போலியான பொருட்களின் விளம்பரங்களில் நடித்தால் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக அபராதம் விதிக்கலாம் என்று விவாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் கூட்டம்
இந்த மசோதாவை அமல்படுத்தும் முன்பு மற்றொரு கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அதில் நுகர்வோர் விவகார அமைச்சகத்தைப் பிற நாடுகளில் இது போன்ற சூழ்நிலைகளில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று ஆய்வு செய்யது அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் 1986 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மற்றும் செய்யப்பட நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2015 அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிக்கை
போலியான விளம்பரத்தைத் தவிர்க கடுமையான நடவடிக்கை எடுக்க மக்களவை இதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் குழு சென்ற ஏப்ரல் மாதம் தனது முதல் அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளது.
முதல் பரிந்துறை
அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் முதல் முறையாகப் போலியான விளம்பரத்தில் நடித்ததாகக் குற்றம் சாட்டப்படும் போது ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் இரண்டு வருடம் சிறை தண்டனை அல்லது ஏதேனும் ஒன்று என்றும் அதுவே தொடர்ந்து இரண்டாம் முறை நேர்ந்தால் ரூ.50 லட்சம் மற்றும் ஐந்து வருடம் சிறை தண்டனை என இரண்டும் அளிக்கலாம் என்றும் அதுவே அந்த தயாரிப்பு பொருட்களின் சந்தை வியாபாரத்தைப் பொருத்து அதிகரிக்கவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
காரணம்
இந்த நடவடிக்கையினால் பிரபலங்கள் தாங்கள் நடிக்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பொருட்கள் போலியானதா இல்லையா என்று ஆராய்ந்த பிறகு ஏற்க வேண்டும் என்பதற்காகவே கடுமையாக இச்சட்டத்தைப் பரிந்துரைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications