வருமான வரி தாக்கல் செய்ய இன்னொரு கடைசி வாய்ப்பை வருமான வரித்துறை அளித்துள்ளது.
இதன் மூலம் வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 இன்றே கடைசி வாய்ப்பு.
இந்த புதிய கடைசி வாய்ப்பின் மூலம் 2009-2010 முதல் 2014-2015 வரையிலான நிதி ஆண்டுகளின் வரியை நீங்கள் தாக்கல் செய்யலாம்.
யாருக்கெல்லாம் இந்தக் கடைசி வாய்ப்பு
இந்தக் கடைசி வாய்ப்பு யாரெல்லாம் வருமான வரிதாக்கல் செய்த பிறகு இன்னும் ஐடிஆர்-V படிவத்தை பெங்களூருவில் உள்ள வருமான வரி சேகரிப்பு மையத்திற்கு 120 நாட்களில் அனுப்பாமல் இருந்தவர்களுக்கு மட்டுமே ஆகும்.
கடந்த நிதி ஆண்டுகளுக்கான தாமதமான வரி தாக்கல் முறையோ அல்லது திருத்தப்பட்டு மீண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான வசதியோ இது அல்ல.
ஐடிஆர்-V
ஐடிஆர்-V ஒப்புகை படிவம் வருமான வரித்துறையினரால் வரி தாக்கல் செய்யும் போது வழங்கப்படுவதாகும். இந்த வரி தாக்கல் செய்யப்பட்ட படிவத்தை சரிபார்த்து பெங்களூருவில் உள்ள மத்திய நேரடி வரி வாரியத்திற்கு அனுப்பி உறுதி செய்யப்பட்ட பிறகே உங்கள் வரி தாக்கலை வருமான வரித் துறையினர் செயல்படுத்துவர்.
டிஜிட்டல் கையொப்பம் உள்ள வரி தாக்கல் செய்பவர்கள் இணையதளம் வாயிலாகவும் ஐடிஆர்-V சரிப்பார்ப்பை செய்யலாம்.
கடைசி வாய்ப்பு
வருமான வரி தாக்கலை சரிபார்க்க 2016, ஆகஸ்ட் 31 ஆம் தேதியே கடைசி என மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள வருமான வரியை சரிபார்த்து செலுத்த இதுவே கடைசி வாய்ப்பு என வருமான வரித்துறை கூறுகின்றனர்.
மின்னனு முறை
கடந்த வருடம், வருமான வரித்துறையினர் மின்னனு மூலம் ஐடிஆர்-V படிவத்தைச் சரிபார்க்கும் முறையை ஆதார் அட்டை மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் ஒன் டைம் பாஸ்வர்ட் பயன்படுத்தி உறுதி வருமான வரியைச் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐடிஆர்-V படிவத்தின் நிலை
உங்கள் ஐடிஆர்-V படிவத்தின் நிலையைக் கண்டறிய வருமான வரித்துறை இணையதளத்திற்குச் சென்று உங்கள் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதா இல்லையா என்று சரிபார்க்கலாம்.
இதற்கு நீங்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் வரித் தாக்கல் செய்யப்பட்ட நிதி ஆண்டை உள்ளிட வேண்டும்.
குறிப்பு
இந்தக் கடைசி வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் முந்தைய ஆண்டுகளுக்குத் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி செல்லாத என்று ஆகிவிடும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications