டிசிஎஸ் நிறுவனத்தைக் காப்பி அடிக்கும் இன்போசிஸ்..! விஷால் சிக்காவின் 'பலே' திட்டம்..!

பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் பல சர்ச்சைகள் மற்றும் பல உயர் அதிகாரிகள் வெளியேற்றத்திற்குப் பின் 2014ஆம் ஆண்டு விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

இவரது நியமனத்திற்குப் பின் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் மட்டத்தில் இருந்து உயர் நிர்வாகக் குழு வரை பல மாற்றங்கள் நடைபெற்றது. சில மாற்றங்கள் வரவேற்கப்பட்டாலும், பல மாற்றங்களுக்குக் கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதற்கெல்லாம் பெரியதாகத் தற்போது ஒரே நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தைப் பல துண்டுகளாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால் சிக்கா.

இன்போசிஸ் விஷால் சிக்கா

இன்போசிஸ் விஷால் சிக்கா

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்சில் இந்நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தில் 49 வயதான விஷால் சிக்கா, இன்போசிஸ் நிறுவனத்தினைப் பன்முக (Decentralise) நிறுவனமாகப் பிரிக்கும் திட்டத்தை விவரித்தார்.

பன்முக நிறுவனம்

பன்முக நிறுவனம்

இன்போசிஸ் நிறுவனம் தற்போது அனைத்துச் சேவைகளையும் ஒரே நிறுவனத்தின் பெயரில் நடத்தி வருகிறது. இதனால் சில பிரிவுகள் நிலையான வர்த்தகத்தை எட்ட முடியாமல் போகிறது. இதனுடன் அதிகளவிலான வளர்ச்சி மற்றும் லாப காரணிகளும் பாதிக்கிறது. இதனைத் தவிர்கவே இத்தகையை முடிவை எடுத்துள்ளார் விஷால் சிக்கா.

செக்

செக்

ஒரே நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தை, தனித்தனி நிறுவனமாகப் பிரித்துத் தனித்தனி இலக்குகளை நிர்ணயம் செய்து, லாப மற்றும் நஷ்டங்களைப் பொருத்து அதன் வளர்ச்சிக்கான முதலீடு செய்ய முடியும்.

இதனால் வளர்ச்சிக்காகப் புதிதாகப் பரிக்கப்பட உள்ள நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படவும், குறைந்த காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதே சிக்காவின் வியூகம்.

 

தனி நிர்வாகக் குழு

தனி நிர்வாகக் குழு

மேலும் புதிதாகப் பிரிக்கப்படும் தனி நிறுவன பரிவுகளை விஷால் சிக்கா தலைமையிலான புதிய நிர்வாகக் குழு நிர்வாகம் செய்யும் எனவும் விஷால் சிக்கா இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு

மதிப்பீடு

தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்படுவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் (பிரிவின்) வளர்ச்சி காரணிகள், இன்போசிஸ் நிறுவனத்தில் அதன் பங்கீடு ஆகியவற்றை எளிதாகக் கணக்கிட முடியும் எனக் கூறிய விஷால் சிக்கா.

எத்தனை பிரிவுகளாக இன்போசிஸ் நிறுவனத்தைப் பிரிக்கப் போவதாகத் தெரிவிக்கவில்லை.

 

இலக்கு

இலக்கு

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்படும் நிறுவனங்களுக்கு 500 - 700 மில்லியன் டாலர் வரையிலான வர்த்தக இலக்குக் கொடுக்கப்படும் என இந்த ஆலோசனை குழு முடிவு செய்துள்ளது.

2வது காலாண்டு முடிவில் தனியாகப் பிரிக்கப்படும் நிறுவனங்களுக்கு விஷால் சிக்கா மற்றும் இன்போசிஸ் நிர்வாகமும், வருவாய் பெறுவதற்கான முழுமையான வழிகாட்டல் அளிக்க உள்ளது.

 

இன்போசிஸ்-டிசிஎஸ்

இன்போசிஸ்-டிசிஎஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் 3 தலைமை நிர்வாகியின் கீழ் நடைபெற்று வரும் நிலையில், டிசிஎஸ் நிறுவனம் மொத்த வர்த்தகமும் 8 பிரிவுகளின் தலைமையின் இயங்குகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தான் இன்போசிஸ் நிறுவனத்தை உடைக்க வேண்டும் என விஷால் சிக்கா திட்டம் தீட்டியுள்ளார்.

 

2009இல் டிசிஎஸ்

2009இல் டிசிஎஸ்

என் சந்திரசேகரன் தலைமையிலான டிசிஎஸ் நிர்வாகம் 2009ஆம் ஆண்டில் இதேபோன்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் பின்னரே டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 8 மிகப்பெரிய தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுத் தற்போது மிகப்பெரிய சாம்ராஜியமாக உருவெடுத்துள்ளது.

23 தனிப் பிரிவுகள்

23 தனிப் பிரிவுகள்

தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 23 தனிப் பிரிவுகள் உள்ளது. இப்பிரிவுகள் அனைத்தும் தனித்தனி தலைமையின் கீழ் மிகவும் சுதந்திரமாகச் செயல்படுகிறது. இப்பிரிவுகளின் வருவாய் 250 மில்லியன் டாலரை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரிவுகள் 1 பில்லியன் டாலர் வருவாய் எட்ட டிசிஎஸ் நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கிறது.

மேலும் இந்தத் தனிப் பிரிவுகளை நிர்வாகம் செய்யச் சுமார் 20 நிர்வாகத் தலைவர்கள் உள்ளனர்.

 

வருவாய் உயர்வு

வருவாய் உயர்வு

இத்தகைய நடவடிக்கையின் மூலம் 2009-10ஆம் நிதியாண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் இன்போசிஸ் நிறுவனத்தை விடவும் 32 சதவீதம் அதிகமாக இருந்தது.

2009-10ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 6.34 பில்லியன் டாலர்.

 

ஜூன் 30,2016

ஜூன் 30,2016

தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 29.3 கோடியாக இருக்கும் நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை அளவுகள் 16.78 கோடி ரூபாயாக உள்ளது.

ஆலோசனை.. ஆய்வு..

ஆலோசனை.. ஆய்வு..

இத்திட்டம் அனைத்தும் தற்போது மேல்மட்ட நிர்வாகக் குழுவின் ஆலோசனையில் உள்ளது. மேல்மட்ட நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இத்திட்டத்தால் இன்போசிஸ் ஊழியர்களுக்கு என்ன பிரச்சனை வருமா..?

 

சிறுசேமிப்பு திட்டங்கள்

சிறுசேமிப்பு திட்டங்கள்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+