முகேஷ் அம்பானி வாயால் கெட்டது 'ஏர்டெல்'.. ரூ.13,800 கோடி ஊ.. ஊ..!

மும்பை: இன்றோடு ஜியோ சந்தைக்கு வந்து 30 மாதங்கள் முடிந்து விட்டது. ஆக ஜியோ வந்த போது என்ன மாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம், மக்கள் என்ன சொன்னார்கள், யாருக்கு எல்லாம் நஷ்டமானது என கொஞ்சம் பின்னோக்கிப்பார்ப்போம்.

பல வருடங்களாகச் சிறந்த டெலிகாம் சேவை அளிப்பதாகக் கூறி மக்களிடம் அதிகப் பணத்தை வசூல் செய்து, தனது சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்திக் கொண்ட ஏர்டெல் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய போட்டி என்று சொன்னால் மிகையாகாது.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் அளவிற்கும், அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் மிகப்பெரிய திட்டத்துடன் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்று சந்தையில் அதிகாரப்பூர்வமாக இறங்கியுள்ளது.

ஜியோ அறிமுக விழாவில் முகேஷ் அம்பானியின் 45 நிமிட பேச்சில் ஏர்டெல் போன்ற நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 13,800 கோடி ரூபாய் இழந்துள்ளது, என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..?

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

கடந்த 6 மாதங்களாக இந்தா வரேன், அதோ வரேன் என்று இழுத்தடித்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஒரு வழியாகச் சோதனை முயற்சியின் வெற்றியின் காரணமாக அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையின் முறையான வர்த்தகத்திற்கு வந்துள்ளது.

45 நிமிட பேச்சு

45 நிமிட பேச்சு

மும்பையில் நடந்த ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழாவில் முகேஷ் அம்பானி தங்களது திட்டம், ஆஃபர், சலுகைகள், மற்றும் சந்தையில் இருக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றைக் குறித்துச் சுமார் 45 நிமிடம் அடித்தி நிமித்தினார்.

13,800 கோடி ரூபாய் போச்சு

13,800 கோடி ரூபாய் போச்சு

ரிலையன்ஸ் ஜியோ குறித்த 45 நிமிட பேச்சில் அதன் போட்டி நிறுவனமான ஏர்டெல், ஐடியா செல்லூலார் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சுமார் 13,800 கோடி ரூபாய் சந்தை முதலீட்டை இழந்துள்ளது.

இதுதான் முகேஷ் அம்பானியின் பவர் என்று சமுக வலைத்தளத்தில் டக்கரான மிமீஸ்களும் உலா வருகிறது.

 

ஏர்டெல் சேவை மட்டம்... இழப்பு உச்சம்..

ஏர்டெல் சேவை மட்டம்... இழப்பு உச்சம்..

இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனம் மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாயை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஸ்லைடரில் இருக்கும் 'மீம்ஸ்' மட்டும் பார்க்க மறந்து விட வேண்டாம்..!

ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

இன்று வர்த்தகச் சந்தையில் 1 ஜிபி இன்டர்நெட் டேட்டா 50 ரூபாய் அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ வின் அட்டகாசமான ஆஃபர் தான் ஹாட் டாப்பிக்.

ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியிலான வாய்ஸ் கால்களுக்கு முழுமையான கட்டண தள்ளுபடி, கட்டணமில்லா ரோமிங், பிற நெட்வொர்கில் இருந்து ஜியோ விற்கு மாறும் வாடிக்கையாளுக்கு அதிகச் சலுகையுடன், 10 தள்ளுபடி ஆபஃர்களை முகேஷ் அம்பானி அறிவித்தார்.

 

திட்டங்கள்

திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோவில் இன்று அறிமுக விழாவில் 19 ரூபாய் முதல் 4,999 ரூபாய் வரையிலான ஆஃபர் திட்டங்களை முகேஷ் அம்பானி அறிவித்தார்.

முதலீடும்.. வளர்ச்சியும்..

முதலீடும்.. வளர்ச்சியும்..

இந்தியாவில் வெறும் ஸ்டார்ட்-அப் நிறுவனமாகத் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 1,50,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் தற்போது மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

அறிமுகத் தினத்திலேயே ரிலையன்ஸ் ஜியோ 2.5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

 

இலக்கு

இலக்கு

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சுமார் 90 சதவீத மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை முகேஷ் அம்பானி இலக்காக நிர்ணயம் செய்துள்ளார்.

தற்போது..

தற்போது..

இன்றைய தினத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களை இணைத்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31

செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31

ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்துச் சேவைகளும் தனது வாடிக்கையாளர்களுக்குச் செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31 முற்றிலும் இலவசம் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

வருத்தம்..

வருத்தம்..

ஆனால் ரிலையன்ஸ் ஜியோ செய்திகளில், மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனமான ஒஎன்ஜிசி-க்கு சொந்தமான இயற்கை எரிவாயு தளங்களில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (BP Plc மற்றும் நிக்கோ ரிசோர்ஸ் ஆகியவை கூட்டணி நிறுவனங்கள்) மறைமுகமாக 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயுவைத் திருடியுள்ளது.

இதற்காக உச்ச நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது.

 

சமுக வலைத்தளம்

சமுக வலைத்தளம்

இந்நிலையில் சமுக வலைத்தளம் ரிலையன்ஸ் நிறுவனம் குறித்து அசத்தலான மீம்ஸ் ஒன்று வளம் வருகிறது. இது தான் அது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+