'செத்தான் சேகர்'.. ஜியோ அறிமுகத்தால் ஏர்டெல், ஐடியா செல்லூலார் கடுமையான பாதிப்பு..!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் சேவைகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய புரட்சி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவின் அறிமுகத்திற்கு முன்பே மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இதன் அறிமுகத் தினத்தன்றே இத்துறை நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல்

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாகக் கருதப்படும் ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று இருந்தாலும் ரிலையன்ஸ் ஜியோ-வின் அறிமுகச் சலுகை விலை திட்டத்திற்கே ஆடம்கண்டது.

கட்டண குறைப்பு

கட்டண குறைப்பு

இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் தனது டேட்டா சேவைக் கட்டணத்தைச் சுமார் 80 சதவீதம் வரை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜியோ அறிமுக நாள் அன்றே பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்குப் பங்கு மதிப்பு சுமார் 7 சதவீதம் வரை குறைந்தது.

 

ஜடியா செல்லூலார்

ஜடியா செல்லூலார்

டெலிகாம் சந்தையில் ஜியோ-விற்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் மற்றொரு நிறுவனம் ஐடியா செல்லூலார்.

பாதிப்பின் உச்சம்..

பாதிப்பின் உச்சம்..

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தைப் போலேவே இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகக் குழும நிறுவனமாக இருக்கும் ஆதித்யா பிர்லா-வின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐடியா செல்லூலார் நிறுவனம், ஏற்கனவே ஏர்டெல், ஏர்டெல், டாடா டோகோமோ, வோடபோன் போன்ற நிறுவனங்களின் போட்டியிஸ் சின்னாபின்னமான நிலையில் ஜியோவின் அறிமுகம் இந்நிறுவனத்தை அதிகளவில் பாதித்தது.

7.30 சதவீதம் சரிவு

7.30 சதவீதம் சரிவு

வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்தால் ஐடியா செல்லூலார் நிறுவன பங்குகள் சுமார் 7.30 சதவீதம் வரையிலான சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டில் இயங்குவதைப் போலவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அவரது தம்பி அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

 

 

 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடம் ஏற்கனவே டெலிகாம் இன்பரா வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ள நிலையில் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்த அனில் அம்பானி கடந்த 1 வருட காலத்தில் எம்டிஎஸ் மற்றும் ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக இருந்த ஏர்செல் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வர்த்தகத்தை முழுமையாக இணைக்க அனிலும் முகேஷ்ம் ஒப்புந்தம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தச் சில மாதங்களில் இணைப்பிற்குப் பின் இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்கப்போகிறது ரிலையன்ஸ் டெலிகாம் கூட்டணி.

ஏர்செல்

ஏர்செல்

எம்டிஎஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமான சிஸ்டமா ஷியாம் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றும் பணியை முழுவீச்சில் செய்து வருகிறது.

சரிவு.

சரிவு.

ரிலையன்ஸ் ஜியோ உடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இணைக்கப்படாத நிலையில் ஜியோ அறிமுகத்தின் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்துள்ளது.

'ஓபன் ஆபீஸ்'

'ஓபன் ஆபீஸ்'

 

 

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+